ஆருஷி



பெங்களூரில் பி.எஸ்சி பயோடெக் படிக்கும் ரம்யா, ‘அழகன் அழகி’ படத்தில் ஆருஷி ஆனார். ‘அடித்தளம்’, ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடிக்கும் இவர், இந்த ஆண்டு இந்தியில் அறிமுகமாகிறார்.

 நடனம், பாட்டு கற்கவில்லை. கேள்வி ஞானத்தால், ஒருமுறை பார்த்தவுடன் நடனமாடு வார், பாடுவார். மழலைத்தனமான குரல் என்பதால், டப்பிங் பேசவில்லை. ஆனால், பேசுவதற்கு பயிற்சி பெறுகிறார். ‘டாபி’ என்ற செல்லப்பிராணிக்கு தீவிர ரசிகை. உயர் இனத்தைச் சேர்ந்த பல நாய்களை வளர்க்கிறார். தோழியின் நாற்பதுக்கும் மேற்பட்ட நாய்களை கொஞ்சி மகிழ்கிறார்.

இந்தியாவிலுள்ள முக்கியமான கோவில்களை சுற்றிப் பார்க்க ஆசை. முதற்கட்டமாக ராமேஸ்வரம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிப் பார்த்துள்ளார். அந்த கோவில்களைப் பற்றிய குறிப்புகளையும் சேகரித்து வருகிறார். கடவுளைக் கும்பிடும்போது, பரவசத்தில் கண்ணீர் வடிப்பார். உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள தபால் தலைகளை சேகரித்து வருகிறார். ஷட்டில்காக் விளையாட்டில் சூரப்புலி. யாரையும் காதலிக்கப் பிடிக்காது. கிசுகிசு வந்தால் அழுவார்.

 தேவராஜ்