லச் சின் இச் இச் இனி இல்லை!



‘ராமர்’ படத்தில் நடித்த மலையாள வரவு அனுமோல், திறமையான நடிகையாக இருந்தும் கோலிவுட்டில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் அல்லாடுகிறார். மலையாளத்தில் பல படங்களில் திறமை காட்டியுள்ள அவர், ‘திலகர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இதில் கிஷோருக்கு ஜோடியாக நடிக்கும் அவர், இப்படம் ரிலீசான பிறகு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இனி தமிழில் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

டான்ஸ் மாஸ்டர்கள் ஹீரோவாக நடிக்கும் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளார், ஸ்ரீதர். அவர் ஹீரோவாக நடித்துள்ள படத்துக்கு 'போலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்பூர்த்தி ஹீரோயின். புதியவர் மாதேஷ் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் ஆசையில், வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் ஸ்ரீதர்.

இனி எந்த ஹீரோ முத்தம் கேட்டாலும், உதடுகளை கொடுக்கமாட்டாராம் லட்சுமி மேனன். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு அவர் கொடுத்த முத்தக்காட்சி, கேரளாவிலுள்ள அவரது உறவினர்களை கொதிப்படையச் செய்து விட்டதாம். ‘பிளஸ் ஒன் படிக்கும் பெண், எப்படி இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சம்மதித்தாள்’ என்று கேட்டுள்ள அவர்கள், லட்சுமி யின் அம்மா உஷா மேனனிடம் கோபித்துக் கொண்டார்களாம்.

இனி இதுபோல் நடித்தால், லட்சுமியிடம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டோம் என்றும் சொன்னார்களாம். இதையடுத்து லட்சுமி, ‘இனி எந்த ஹீரோ முத்தம் கேட்டாலும் கொடுத்து நடிக்க மாட்டேன்’ என்று வாக்குறுதி கொடுத்திருக் கிறாராம்.

 தேவராஜ்