நடிப்பை மட்டும் நம்பீ...



‘வேலாயுதம்’ ரிலீசுக்குப் பிறகு மீண்டும் விஜய் ஜோடியாக ஹன்சிகா நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழில் சிம்பு ஜோடியாக ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ‘எங்கேயும் காதல்’ ரிலீசைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவி ஜோடியாக ‘ரோமியோ ஜூலியட்’, ஆர்யா ஜோடியாக ‘மீகாமன்’, ஜெயப்பிரதா உறவினர் சித்தார்த் ஜோடியாக ‘உயிரே உயிரே’,

சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’, தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக ஒரு படம் என, கைவசம் 8 படங்கள் வைத்திருக்கிறார். ஒரு படத்துக்கு 100 லட்சம் முதல் 125 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்! விளையாட்டு என்றால் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிவிடும் ஹன்சிகா, சமீபகாலமாக ஸ்குவாஷ் விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்.


‘ஆடுகளம்‘, ‘மௌன குரு’, ‘குட்டிப்புலி’, ‘தகராறு’, ‘குக்கூ’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திரம் பிளஸ் காமெடி வேடத்தில் நடித்தவர், ஆடுகளம் முருகதாஸ். வானூர் கூத்திரை காசிப்பாளையத்தைச் சேர்ந்த பி.ஏ மாணவி, சாரதா. இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததைத் தொடர்ந்து, 27ம் தேதி பாண்டிச் சேரியிலுள்ள அரியாங்குப்பத்தில் திருமணம் நடந்தது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துமாறு நண்பர்கள் வற்புறுத்தியபோது, தனது அந்தஸ்துக்கு சரிப்பட்டு வராது என்று மறுத்து விட்டார் முருகதாஸ்.

‘ரெண்டாவது படம்’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், தமிழில் தனக்கான இடம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். எனவே, மலையாளத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள அவர், அங்கு தனக்கு அதிக சம்பளம் கிடைக்காது என்கிறார்.

மேலும், தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடிக்க வந்த அழைப்பையும் நிராகரித்து விட்டாராம். ‘நான் நடிச்ச படங்களை சில வருஷங்கள் கழிச்சு பார்க்கிறப்ப, அது யார் மனசையும் உறுத்தாம இருக்கணும். அதிக சம்பளம் கிடைக்குதேன்னு கவர்ச்சி காட்டி நடிச்சா, நாளைக்கே அது வில்லங்கம் ஆயிடும். நிறைய படங்களில் நடிக்கலன்னா கூட பரவாயில்ல. நீச்சல் டிரெஸ் போட்டுகிட்டு, முத்தக்காட்சியில் நடிக்கிறது எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது’ என்கிறார்.

 தேவராஜ்