அனுஷ்காவுக்கு அதுவே போதுமாம்!



இந்திய சினிமாவின் காஸ்ட்லியான நடிகை அனுஷ்கா. 100 கோடி பட்ஜெட்டில் ‘ருத்ரமாதேவி’, 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘பாகுபலி’ என அவரை நம்பி கோடிகளைக் கொட்டுகிறார்கள் தெலுங்குவாலாக்கள். அனுஷ்காவும் கொடுக்கிற காசுக்கு ஓடியாடி உழைக்கிறார். வாள் சண்டை, கத்திச் சண்டை, கம்புச் சண்டை, குதிரையேற்றம், யானையேற்றம் எல்லாம் கற்றுத் ேதர்ந்து, அதை சரியாகச் செய்தும் இருக்கிறார்.

30 கிலோ எடையுள்ள நகைகளை அணிந்து நடித்திருக்கிறார். அனுஷ்கா இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறாங்களே. அவிங்களுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சா அது தப்பு. என்ன கஷ்டப்பட்டு நடிச்சாலும் அவருக்கு தேசிய விருது வாய்ப்பு இல்லை. காரணம், தமிழ், ெதலுங்கு இரண்டு மொழியிலேயும் அவர் டப்பிங் பேச மட்டார். அவருக்கு பதில் ேவறொருவர்தான் பேசுவார்.  சொந்தக் குரலில் பேசி நடிக்காதவர்களுக்கு தேசிய விருதுக்கு வாய்ப்பில்லை. இதுபற்றி அனுஷ்காவிடம் கேட்டால்...

“நான் விருதுக்காக நடிக்கல. ரசிகர்களுக்காக நடிக்கிறேன். தியேட்டர்ல ரசிகர்கள் கைதட்டுறாங்களே அதுதாங்க நிஜமான விருது. அதுக்காக நான் விருதை குறைச்சு மதிப்பிடல. விருது கிடைக்கணுங்றதுக்காக படத்துக்கு தேவையில்லாத விஷயத்தைச் செய்யக்கூடாது. என் கேரக்டர் சூப்பரா வரணும்னா அதுக்கு திறமையானவங்க டப்பிங் கொடுக்கணும். அப்படின்னா அதை செய்றதுதானே நியாயம்? ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என்ற இரண்டு லேண்ட் மார்க் படத்துல நான் இருக்கேன். அந்த பெருமையே எனக்குப் போதும்” என்கிறார் கூலாக...

-கதிர்