நயன் வழியில் ஆண்ட்ரியா!



ஆண்ட்ரியாவுக்கு மீடியாவிடம் பேசப் பிடிக்காது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைப் பார்க்கச் செல்பவர்கள், கடைசி வரை காத்திருக்க வேண்டியதுதான். அவரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நம்பி ஏமாற வேண்டியிருக்கும். ‘நான் ஒண்ணு சொன்னா, அவங்க ஒண்ணு எழுதறாங்க. பிறகு எதுக்காக அவங்ககிட்ட நான் பேசணும்?’ என்று கேட்கிறார்.

படத்தின் புரமோஷனுக்கு வந்தால், முன்னணி மீடியாவா என்று கேட்டு பேசுகிறார். அதுவும் ஓரிரு நிமிடங்கள்தான். இந்த விஷயத்தில் நயன்தாரா ஒரு படி உயர்ந்து நிற்கிறார். படத்தில் ஒப்பந்தம் போடும்போது, ‘புரமோஷன் சம்பந்தமான எந்த விஷயத்துக்கும் வர மாட்டேன். யாரும் நிர்ப்பந்திக்கக் கூடாது’ என்று சொல்லி விடுகிறார்.

-ராஜ்