அழகை ட்ரிம் செய்த ராஜஸ்ரீ!



பாரதிராஜாவின் அறிமுக நாயகிகளில் கவனத்துக்குரியவர் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ. 1994ல் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்தவர், அறிமுகப்படமான ‘கருத்தம்மா’வுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதுபெற்ற பெருமை உள்ளவர்.

கதாநாயகியாக நடித்து பெயர்பெற்றதைப்போல, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தபோதும் தனி முத்திரை பதித்தவர். ‘நந்தா’ படத்தில் சூர்யாவின் அம்மாவாக வந்து, உருகும் நடிப்பால் உள்ளம் தொட்டவர். ‘ரன்’, ‘மனசெல்லாம்’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்களிலும் ராஜஸ்ரீயின் நடிப்பு சினிமா ரசிகர்களை ஈர்த்தது.

60 திரைப்படங்கள், 50 தொலைக்காட்சித்தொடர்களில் நடித்தவர், திருமணத்துக்குப்பின் குடும்பப் பராமரிப்பில் முழு கவனம் செலுத்தினார். இப்போது இயக்குனர் பாலா தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் உருவாகும் ‘சண்டிவீரன்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராஜஸ்ரீ. ரசிகர்களைக் கவர்வதற்காக 20 கிலோ எடை குறைத்து அழகை ட்ரிம் செய்திருக்கிறார்.

‘சண்டி வீரன்’ படத்தில் அதர்வாவுக்கு அம்மாவாக, உள்ளம் தொடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அம்மா - மகன் உறவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான பாடல் காட்சியிலும் அதர்வாவுடன் பங்கேற்று நடித்திருக்கிறார். இந்தப்படம் வெளிவந்தபிறகு கோடம்பாக்கத்தின் கவனம் தன் பக்கம் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறார் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ. அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக திரைவலம் வருவதற்கு தயாராக இருக்கிறார் ‘கருத்தம்மா’ ராஜ.

-என்