அட்டகத்தி நாயகி வைத்த ஐஸ்!



‘ஜோதிகாவைப் பார்த்துதான் நடிகையானேன்’ என்று, வாய் கூசாமல் கதையளக்கிறார் நந்திதா ஸ்வேதா. ‘மொழி’ படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியாது என்றும் சொல்கிறார். சமீபத்தில் ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து வியந்த அவர், அவரை உடனே சந்தித்துப் பேச ஆசைப்பட்டிருக்கிறார்.

இதையறிந்த கே.ராதாமோகன், தனது இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா நடித்த ‘உப்புகருவாடு’ படத்தின் டீசரை ஜோதிகாவை வைத்து வெளியிட்டு, போட்டோக்கள் எடுத்து நெட்டில் உலவ விட்டார். அப்போது ஜோதிகாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நந்திதா ஸ்வேதா, ‘நான் உங்களின் தீவிர ரசிகை’ என்று ஐஸ் வைத்திருக்கிறார். வழக்கம் போல் ஜோதிகா சிரித்திருக்கிறார்.

-தேவா