‘ஏ’ சர்ட்டிஃபிகேட்டா? கவர்ச்சி நடிகை அலறல்!



ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னோடு டேட்டிங்குக்கு வரமாட்டாரா என்று பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரில் தொடங்கி சுள்ளான் வரை ஏங்குகிறார்கள். ஆனால், அம்மணிக்கு ஜாக்கிசானோடுதான் டேட்டிங் செய்ய ஆசையாம்.“எப்போ பார்த்தாலும் பெட்ரூம் சீன்தானா? ஏதாவது குடும்ப குத்துவிளக்கு மாதிரி ரோல் கொடுங்கப்பா...” என்று இயக்குநர்களுக்கு எஸ்.எம்.எஸ்.

அனுப்பி அலப்பறை கொடுக்கிறாராம் சன்னி லியோன்.திருமணத்துக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு கிஸ்ஸிங் சீன்ஸ் ஓக்கேவாம். ஆனால், அதில் ஆபாசம் இருக்கக் கூடாதாம்.“சன்னிலியோன் நடிக்கிற படத்துக்கெல்லாம் ‘யூ’ சர்ட்டிஃபிகேட் தர்றாங்க. என் முகம் ஸ்க்ரீனில் தெரிஞ்சாலே ‘ஏ’தான்னு முத்திரை கொடுத்துடறாங்க” என்று சென்ஸார் மீது பாய்ந்திருக்கிறார் ராக்கி சாவந்த்.

- ஜியா