துல்லியமான சினிமா செய்திகளுக்கு துளசி சினிமா!



தமிழ் சினிமாத்துறையின் தகவல் களஞ்சியமாக மாறியிருக்கிறார் பத்திரிகை தொடர்பாளரும், கதாசிரியருமான பெரு.துளசி பழனிவேல். ‘துளசி சினிமா நியூஸ்’ என்கிற பெயரில் அவர் கொண்டுவரும் புத்தகம், சமகால சினிமாவின் விக்கிப்பீடியாவாகத் திகழ்கிறது.2017-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் வெளியாகியிருக்கும் படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் திரட்டி இந்நூலில் கொடுத்திருக்கிறார்.

அவை மட்டுமின்றி முன்னோடிக் கலைஞர்களின் முதல் படங்கள், கலைஞர்களின் வாரிசுகள் பணியாற்றும் படங்கள் போன்ற ஏராளமான தகவல்களுடன் கலைத்துறையில் நடந்த திருமணங்கள், மரணங்கள் பற்றிய புள்ளிவிபரங்களையும் அச்சுப் பிழை இல்லாமல் துல்லியமாகத் தொகுத்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

சமீபத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ‘துளசி சினிமா நியூஸ்’ புத்தகமும் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய பிரபலங்கள், ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்களின் பாதையில் தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியமாக பெரு.துளசி பழனிவேல் திகழ வேண்டும் என்றும், அவரது இந்த அற்புதமான சேவை என்றென்றும் தொடர வேண்டும் என்றும் மனதார வாழ்த்தினார்கள்.

- எஸ்