சரோஜாதேவி இல்லையே?



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

ஒவ்வொரு வாரமும் புதுப்புது கதைக்களங்களை அறிமுகப்படுத்தி, அந்தக் களங்களை அணுகும் டெக்னிக்குகளை விதவிதமாய் சொல்லி அசத்திக் கொண்டிருக்கும் ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ பகுதி, பல வாசகர்களை கதாசிரியர்களாய் மாற்றி கோடம்பாக்கத்தை நோக்கி படையெடுக்க வைக்கப் போகிறது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘பழக பழக பலாப்பழம்’ என்கிற தலைப்பை அட்டைப் படத்தில் கண்டதுமே ஏதோ பலான மேட்டரோ என்று ஆவலாகப் பிரித்துப் பார்த்து ஏமாந்து நொந்தேன்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சந்தீப் மீது ரெஜினா ஏறிக்கொண்ட நடுப்பக்க படத்தை கண்டதும் மனசு தாறுமாறாக எகிறிக் கொண்டது.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.

வாய்ப்புகளைப் பொறுத்து வரவு என்றில்லாமல் வயதைப் பொறுத்து வாய்ப்பு என்கிற ஃபார்முலாவை பயன்படுத்தும் ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படத்துக்கு, ‘வண்ணத்திரை’ வரைந்திருக்கும் விமர்சனம் ‘என்றும் பதினாறு’ ஸ்ரீதேவிக்கு செய்திருக்கும் கவுரவம்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

வண்ணங்களை வாரியிறைத்து இத்தனை புளோஅப்புகள், அதற்கென்று ‘ஜில்’ கமென்டுகள் இருந்தெல்லாம் என்ன பிரயோசனம்? ‘சரோஜா தேவி பதில்கள்’ இல்லையே என்றுதான் மனசு நிம்மதி இல்லாமல் ஏங்கித் தவித்தது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஸ்ருதிஹாசனின் பேட்டி கோன் ஐஸ் சாப்பிட்ட குளிர்ச்சியை ஏற்படுத்தியது. போலவே ஹன்சிகாவின் முன் -பின் அட்டைகள் அலுத்த உடலுக்கு அம்சமான மசாஜாக அமைந்தது.
- ப.முரளி, சேலம்.

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இயக்குநராக அறிமுகமாகும் ‘முந்தல்’ பார்க்க காத்திருக்கிறேன்.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.