மனதுக்கு இதமாக இருந்தது!



‘பக்தனைத் தாங்கிய பகவானின் பாதச் சுவடுகள்’ - ஓர் அருமையான விழிப்புணர்வு கட்டுரை. பஞ்சபூதங்களின் வடிவாக இறைவனை தரிசிப்பதோடு அவற்றை முறையாகப் பராமரித்து வாழ்ந்தால் சந்ததி நலம் பெறும் என்றுகூறி பி.என்.பரசுராமன் அவர்கள் ‘திருமூலர் மந்திர ரகசியம்’ மூலம் எச்சரித்த விதம் அருமை.
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

‘தீபாவளி நாயகனா’ன கிருஷ்ணனைப் பற்றிதான் எத்தனை ஆதாரபூர்வமான தகவல்கள்! வேதம், புராணம், இதிகாசம், பௌத்த ஜாதக, சமண கிரந்தங்களைச் சுட்டிக்காட்டி விளக்கியது அருமை.
- ஜோதி அனந்தநாராயணன், மதுரை

‘பரந்தாமனே செயலாற்றிக்கொண்டுதான் இருக்கிறான். இது உண்மைதான், அனுபவபூர்வமான உண்மை. இல்லாவிட்டால் உலக இயக்கம் தயங்கித் தயங்கி, ஓய்ந்து நின்றே விடாதா!
- விஜயா முரளிதரன், கே.கே.நகர்.

சென்னைவள்ளுவப் பெருந்தகை காமம் சார்ந்த வர்ணனைகளைத் தவிர்த்துக் காதல் சார்ந்தே வர்ணனைகளை எழுதித் தமிழைத் தழைக்கச் செய்ததை கட்டுரை முழுவதும் நனி சொட்டச்சொட்ட திருப்பூரார் தந்திருப்பது மனதுக்கு இதமாக இருந்தது.
- இராம. கண்ணன், திருநெல்வேலி.

upper பெருமானை நம்மோடு ஒப்பிட முடியுமா என்ன? நாம் எப்போதுமே lowerதான்! ஆழ்வார்க்கடியானின் யதார்த்தத் தொடர் நம்மையே நமக்கு அடையாளம் காட்டுகிறது!
- கற்பகம் பாலச்சந்திரன், உடையாளூர்.

குடிநீருக்கு ஆலாய்ப் பறக்கிறோமே, அந்த காலத்திலேயே அதன் அருமையை உணர்ந்து செவ்வப்ப நாயக்கர் போன்ற மன்னர்கள், எதிர்கால நன்மையைக் கருதி நீர்நிலைகளை உருவாக்கினார்கள் என்ற தகவல் (கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்) பிரமிக்க வைக்கிறது, பெருமூச்செறிய வைக்கிறது. அதே உணர்வைத் தந்த இன்னொரு கட்டுரை - கொல்லம்கொண்டான் ஜமீந்தார் பற்றியது.
- எஸ்.கோபாலன், அருவங்காடு.

நீலகிரிமுருகன் என்ற அழகனை பக்தியால் கொஞ்சுவதுதான் எத்தனை சுகம்! அருணகிரியோடு ஆனந்த உலா வரும் சித்ரா மூர்த்தி அவர்களுக்கு மால்மருகன் எல்லா நலன்களையும் அருளட்டும்.
- கோமதி சுப்பிரமணியன், சங்கரன்கோவில்.

கனவுகளுக்கு, கவிஞர் இலக்கிய-ஆன்மிக பூர்வமாகத் தந்த விளக்கங்கள் அருமை. காலத்தால் அழியாத பெட்டகம், ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்றால் அது மிகையல்ல.
- பி.சரவணகுமார், நாகர்கோவில்.

இந்த ஆண்டு தீபாவளியை வித்தியாசமாகத்தான் கொண்டாடினோம் - திருமதி சந்திரலேகா ராமமூர்த்தி அளித்த வித்தியாசமான பிரசாதங்களைத் தயாரித்து!
- கிருஷ்ணவேணி, ஜவஹர் நகர்.

சென்னைதீபாவளியை முன்னிட்டு வெளியான அட்டைப்படம் கிருஷ்ணர் வெகு நேர்த்தி. கண்களில் ஒற்றிக்கொண்டேன். இதுவரை கேட்டிராத ‘காவிரியில் நீராடிய கிருஷ்ணன்’ கதை அற்புதம். தீபாவளிக் கொண்டாடும் கிராமத்துக் கோயில்கள் தரிசனம் பேரானந்தம் தந்தது.
- இரா. கல்யாணசுந்தரம், வேளச்சேரி.

சென்னை ‘தெளிவு பெறுஓம்’ தகவல்களை பதிலாகத் தரும் சாதாரண கட்டுரை அல்ல; கேள்வி கேட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே பயன்படும் அட்சயப் பாத்திரம்.
- டி.கே.அருணாகுமாரி, சேத்தியாதோப்பு.

திருமூலர் மந்திர ரகசியம் அடுத்த இதழில்...