ஸ்பீக்கரு...



‘‘ஜாமீன்ல வந்த தலைவர் நீ சொன்னதைக் கேட்டு டென்ஷன் ஆயிட்டாரே... அப்படி என்ன சொன்னே?’’
‘‘அவர்கிட்ட ‘ஜெயில்ஸ் டு கோ’னு சொன்னேன்...’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.



‘‘அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘பேஷன்ட்டுங்களைப் பார்த்து ‘என்கிட்டே நீங்க எதை வேணும்னாலும் மறைக்கலாம்’னு சொல்றாரே!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘மேடைக்கு வந்த தலைவர் ஓவர் போதைல தள்ளாட ஆரம்பிச்சிட்டார்...’’
‘‘அடடே, அப்புறம்?’’
‘‘தலைவர் இப்போ ‘டாங்கோ நடனம்’ ஆடுகிறார்னு சொல்லி சமாளிச்சிட்டோம்..!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘தலைவர் மப்புல இருக்கார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘மேடையில வச்சிருக்கற மைக்கைப் பார்த்து, ‘அங்க ஒல்லியா நிக்கறது யாரு’னு கேட்கறாரே..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘என்னுடைய உருவ பொம்மையை எரிக்கிற எதிர்க்கட்சிக்காரங்களை அவங்க தலைவர் ஏன்யா திட்றாரு?’’
‘‘உங்களை மாதிரி செய்யாம, பொம்மையை அழகா செஞ்சிட்டாங்களாம தலைவரே..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.


அடுத்தபடியாக முதலமைச்சர் கனவை 2021க்கு ஒத்தி வைத்திருக்கும் தலைவர் அவர்கள் பேசுவார்கள்...’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தா ‘ரேவதி’ன்னு பேரு வைக்கிறாங்க; கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தா ‘கார்த்திகா’ன்னு பேரு வைக்கிறாங்க. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தா மட்டும் ஏன் ‘மூலம்’னு பேரு வைக்க மாட்டேங்கிறாங்க?
- மூலையில் உட்கார்ந்து சாலையைப் பார்ப்போர் சங்கம்.
- ஜி.டி.ரமேஷ்குமார், சென்னை-15.