கவர்ச்சி அருவி... இப்போது இறைவி!So Sad சோஃபியா ஹயாத்!

சோஃபியா ஹயாத்... ரோஹித் ஷர்மா ஒன்டே மேட்ச்சில் அதிகபட்சமாக 264 ரன் விளாசியபோது அவருக்காக தன் நிர்வாண போட்டோக்களைக் காணிக்கையாக்கிய அதே தில் நடிகைதான்...‘பிக் பாஸ்’ டி.வி நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை போன அதே கவர்ச்சிக் கன்னிதான்...இப்போது அவர் நடிகை சோஃபியா இல்லை... கயா சோஃபியா அன்னை.ஆம், கவர்ச்சி அருவியாக இருந்தவர் இப்போது துறவியாகிவிட்டார்... இல்லை இல்லை... இறைவியாகிவிட்டார்! ‘‘இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. இரண்டு வருடங்களாக நான் இதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன்!’’ எனச் சொல்லும் சோஃபியா, ‘‘2015 ஜூலையில் இருந்து நான் யாருடனும் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. துறவு வாழ்வைக் கடைப்பிடிக்கிறேன்!’’ எனச் சொல்லி பரபரப்பு பட்டாசைக் கொளுத்தியிருக்கிறார்.

சோஃபியா நடித்த ‘சிக்ஸ்-எக்ஸ்’ எனும் பாலிவுட் திரைப்படம் சமீபத்தில்தான் திரைக்கு வந்தது. அதில் கூட நடிகர் அஷ்மித் பட்டேலுடன் சோஃபியாவுக்கு நெருக்கக் காட்சிகள் இருந்தன. திடீரென்று ஏன் இப்படி? பாலிவுட்டே திகைத்துத்தான் நிற்கிறது. ‘‘நான் ஒரு தவறான உறவில் இருந்தேன். அது என்னைத் தற்கொலை வரை துரத்தியது. கிட்டத்தட்ட மரண விளிம்பு வரை போய் வந்த எனக்கு ஞானம் கிடைத்திருந்தது. பல சக்திகளும் கிடைத்திருந்தன!’’ என்கிற சோஃபியா, குழந்தை இல்லாத ஒரு பெண்ணை தன் சக்தியால் கருவுறச் செய்ததாகவும் சொல்லிக்கொள்கிறார்.

‘‘இனி வாழ்வில் மேக்கப் போட மாட்டேன். நடிக்கவும் மாட்டேன். அதெல்லாம் பொய்த் தோற்றத்தை உருவாக்குபவை’’ என ஒரே போடாகப் போடும் ‘சோஃபியா அன்னை’, கிறித்துவ கன்னியாஸ்திரி போல உடை அணிந்திருக்கிறார். ஆனால், ‘ஓம்’ எனும் எழுத்தையே பொட்டாக வைத்திருக்கிறார்.

2013ல் வெளிடப்பட்ட உலகின் செக்ஸியஸ்ட் பெண்களின் பட்டியலில் 81ம் இடம் பிடித்தவர் சோஃபியா. இன்று அவரின் இன்ஸ்டாகிராம் பயோ இதுதான்... ‘‘நான் கயா சோஃபியா அன்னை. அனைத்துக்கும் நானே அன்னை. நான் ஓம் என்று உச்சரித்தபோதுதான் உலகம் உண்டாக்கப்பட்டது. உண்மையைப் பரப்பவே நான் விழித்தெழுந்தேன். நானே வாழும் உண்மையாக இருக்கிறேன்!’’ இன்னொரு பெண் சாமியார் ரெடிங்கோ!

- நவநீதன்