‘தல’ நிமிர்ந்த சந்தோஷம்!
எதிர்காலம் உள்ள பொறியியல் படிப்புகளை எப்படித் தேர்ந்தெடுப்பது என விவரித்தது காலத்திற்கேற்ற அக்கறையான அப்டேட் மந்திரம்! - ஜி.சுபத்ரா சிவராமன், கோவை.
இளசு புதுசு... டைட்டிலுக்கு ஏற்றபடி ஹீரோயின்கள் எல்லாமே புது தினுசு... ஜில் ஜில் போட்டோக்கள் கோடைப் பரிசு. உம்ம மனசு ரொம்ப பெருசு! - சிவமைந்தன், சென்னை-78.

இலவசங்கள் எடுபடாது என நெஞ்சு நிமிர்த்தும் தமிழர் சசிந்தரனின் செய்தி அற்புதம். இந்த நிலை தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும் என ஆதங்கம் எழுகிறது! - பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.
‘பிரெட்டுக்குள் புற்றுநோய்’ செய்தியைப் படித்தபோது பிரெட்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலர்ட்டாகி உடனே தூக்கிப் போட்டுட்டேன் சாமி! - மைக்கேல்ராஜ், சாத்தூர்.
மூன்று ஆபரேஷன்களுக்குப் பிறகு ‘தல’ நிமிர்ந்த செய்தி, சரவெடி சந்தோஷம் தந்தது. பளிச் போட்டோக்கள் செம கிரேஸ். - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
ஹோட்டலில் தங்குவது குறித்த பயம் நடிகைகளுக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே இருக்கிறது. இனி, கேமரா கண்களிடம் தப்பித்து அந்தரங்கம் காப்பது கடினம்தான்! - கே.சிவசெல்வி பரமேஷ், ஈரோடு.
ஆட்டிஸத்தை ஆச்சரியக் குறியாக்கி, ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு முன்னேறியிருக்கும் ஐஸ்வர்யா லட்சியப் பெண்ணேதான்! - வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
வாய்ப்பேச்சில் பிளேடு போட்டே விருதுகளைத் தட்டி கெத்தாக வாழும் பிளேடு சங்கர்ஜிக்கு வாழ்த்துகள்! - மு.கிருதியாபாலா, புதுச்சேரி.
பெண்ணுக்காக வேட்டி வரிந்து கட்டி பேசும் ராமின் பேட்டி விறுவிறுப்புடன் செம ரகளை! - ப.நந்தா மணிகண்டன், திருப்பூர்.
10 மணி நேரம் பெயின்ட் அடித்த சுவர் காய்வதை அப்படியே ஒரு திரைப்படமாக்கி, சென்சார் அதிகாரிகளை மண்டை காயச் செய்த பிரிட்டன் இளைஞர் சார்லி லைன் செம கில்லாடி! - வீ.அரசு, புதுச்சேரி.
கணவர் ரகுவரன் பற்றி இத்தனை நாள் சொல்லாத பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட நடிகை ரோகிணியின் Download மனசு பக்கங்கள் மிக ஈரமானவை! - கே.சாரதா, திருச்சி.
|