கவிதைக்காரர்கள் வீதி
 முள்ளைவிட மோசமாக இருக்க வேண்டும், ரோஜாவைப் பிழிந்து அத்தர் எடுக்க! - பா.விஜயராமன், திட்டச்சேரி.
தொலைந்து போன நதியினால் தொக்கி நிற்கின்றன பாலங்கள் அர்த்தமற்று! - மகிவனி, கோவை.
சிறு கலயத்தில் மசித்துக் குழைத்து மழலைக்கு ஊட்டும் கணத்தில் அம்மாவின் வாயில் வந்து அமர்ந்துகொள்கிறது ‘ஆ’வெனும் பால்யம்! - வ.முருகன்,பாப்பனப்பட்டு.
காற்றில் தடுமாறிப் பறக்கிறது மரம், காகிதமாக! - தில்பாரதி, திருச்சி.
தொலைவில் வரும் தொடர்வண்டி எவ்வித சலனமுமின்றி இருப்புப் பாதையில் பட்டாம்பூச்சி. - ச.கோபிநாத், சேலம்.
பூட்டிக் கிடக்கும் பூர்வீக வீட்டில் ஏகபோகமாய் வாழ்ந்து தொலைக்கிறது வறட்டுப் பிடிவாதம்! - நா.கி.பிரசாத்,கோவை.
|