குங்குமம் டாக்கீஸ்
‘ரெமோ’வை முடித்துவிட்டு, விஜய்யின் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அடுத்து தெலுங்கில் ‘நான் ஈ’ நானி படத்தில் கமிட் ஆகிறார். வட போச்சே!
 தன்னிடம் பத்து ஆண்டுகளுக்கு மேலிருக்கும் மேக்கப்மேன் ராஜுவுக்கு நயன்தாரா கார் வாங்கிக் கொடுத்தது பழைய செய்தி. அவரை ஒரு படம் தயாரிக்கவும் சொல்லியிருக்கிறார். அதில் ஹீரோயினாக நடிப்பதோடு, படத்திற்கு ஃபைனான்ஸ் ஏற்பாடும் செய்து தரப் போகிறாராம். ‘தாரா’ள மனசு!
அடுத்த படத்தில் நடிக்க பிரசாந்த் யோசித்துக் கொண்டிருக்க, அப்பா தியாகராஜன் இப்போது இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க ஓகே சொல்லிவிட்டார். தியாகராஜனும், பிரசாந்தும் சேர்ந்து அப்பா - மகனாகவே நடிக்க ஏற்பாடு நடக்கிறது. டபுள் ரீஎன்ட்ரி!
 ‘லகான்’, ‘ஜோதா அக்பர்’ படங்களை இயக்கிய ஆஷுதோஷ் கோவாரிகர், இப்போது ஹ்ரித்திக் ரோஷனை வைத்து ‘மொகஞ்சதாரோ’ இயக்கி வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. தமிழில் ‘முகமூடி’யில் நடித்த பூஜா ஹெக்டே இதில் ஹீரோயின். படம், ஆகஸ்டில் ரிலீஸ்! பாலிவுட் கிஸ் உண்டுதானே?
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஜில்லா’ ரீமேக்கில் நடித்து வருகிறார் மோகன்லால். சமீபத்தில் அவர் தனது 28வது திருமண நாளை வியட்நாமில் மனைவியோடு கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்! எல்லாம் காத‘லால்’!
‘விஜய்-60’ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாகபாடல் ஷூட்டுக்காக சுவிட்சர்லாந்து பறக்க உள்ளனர். ஸ்விங்ங்ங்...ங்!
ராஜீவ் படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னைக்கு கோரிக்கைப் பேரணி நடத்துகிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள். இதற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அதோடு, இதற்கு அழைப்பு விடுக்கும் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். இதற்கு லைக்ஸ் குவிகிறது! தர்ம துரை!
தமிழ், மலையாளம் என நடித்து, படிப்பிற்காக அமெரிக்கா பறந்த பத்மப்ரியாவை நினைவிருக்கிறதா? தன் ஆய்வுப் படிப்பிற்காக பிறகு கேரளா வந்தவர், அங்கே ஒரு தன்னார்வ நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்திருக்கிறார். இதனிடையே பெங்காலி படம் ஒன்றிலும் இப்போது நடித்து வருகிறார். வெல்கம் பேக்!
பாக்ஸராக அறியப்பட்ட ரித்திகா சிங், இந்தி ‘இறுதிச்சுற்று’க்குப் பிறகு பாலிவுட் நடிகையாகவும் பிரபலமாகிவிட்டார். ‘‘ இன்னமும் நான், கராத்தே, கிக்பாக்ஸிங் ப்ராக்டீஸ்ல தான் இருக்கேன். உலக அரங்கில் இந்தியா சார்பில் விளையாடி பெயர் வாங்குறதுதான் என் நீண்டநாள் கனவு!’’ என்கிறார் ரித்திகா சிங். அப்போ எங்க கனவு..?
அட்லிக்கு மறுபடியும் கால்ஷீட் தருவதாகச் சொல்லியிருந்தார் விஜய். இப்போது ஒரு வருடம் காத்திருக்கச் சொல்லிவிட்டார். அட்லி இதனால் நிவின் பாலியைத் தேடிப் போயிருக்கிறார். பலாக்காய் - களாக்காய்!
மும்பையில் சொந்தமாக 3 பெட்ரூம் அபார்ட்மென்ட் வாங்கிவிட்டார் எமி ஜாக்சன். அம்மாவுடன் அங்கேயே தங்கியிருந்து தன் கனவு இல்லத்திற்கான இன்டீரியர் மற்றும் கலைப் பொருட்களை எல்லாம் மூன்று மாதங்களாக தேடிப் பிடித்து வாங்கிக் குவித்திருக்கிறார். ஐ, மும்பை பட்டினம்!
சென்னைக்கு வந்திருந்த ரம்பாவிடம் விஜய்க்கு அக்காவாக நடிக்கக் கேட்டார்கள். கோபித்துக் கொண்டு ‘முடியாது’ என சொல்லிவிட்டாராம். ‘‘ரம்பா... சார்’’!
தலை நிமிரட்டும்!
என்னதான் ‘தல’ அக்கா கணவராக இருந்தாலும், ஷாம்லி தன் படக்கதைகளை அவரிடம் சொல்வதே இல்லையாம். வெளியே அறிவிப்பு வந்த பிறகுதான் அஜித்தே தெரிந்துகொள்வாராம். ‘‘பட விவகாரங்களை அவரவர்களே ேதர்வு செய்வதுதான் சரி’’ என்று சொல்லியிருக்கிறார் அஜித்.
பிரேக்கப்புக்கு முன்னாடி ஃபிக்ஸ் பண்ணிடுங்க!
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஹீரோயின் விசாகா சிங் காதலில் விழுந்திருக்கிறார். ஏர்லைன்ஸ் ஒன்றில் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான விக்ராந்தை அவர் கைபிடிக்கப் போவதாகச் சொல்கின்றன மும்பை மீடியாக்கள். ‘‘என்னோட 14 வயசிலிருந்து விக்ராந்தை எனக்குத் தெரியும். அவன் என் பிரதரோட ஃப்ரெண்ட்!’’ என்கிறார் விசாகா. எப்போது திருமணம் என இன்னும் முடிவு பண்ணலையாம்!
சயிஃப் அலிகான்... நோட் திஸ் பாயின்ட்!
மலையாள மார்க்கண்டேயனான மம்முட்டியின் இளமை குறித்து வியந்திருக்கிறார் கரீனா கபூர். ‘‘இதுவரை மம்முட்டி போல் யாரும் இந்த வயதில் இளமையாகவும், கட்டுக்கோப்பான உடல் அமைப்புடனும் இருந்தது இல்லை. இந்தி நடிகர்களால் தங்கள் உடலை இதுபோல் வைக்க முடியவில்லை!’’ என வியக்கிறார் கரீனா.
|