ஜோக்ஸ்



‘‘எதுக்குய்யா ‘துவரம்பருப்பு கிலோ 30 ரூபாய்’னு மைக்ல அறிவிக்கறே..?’’
‘‘ரெண்டே நிமிஷத்துல மேடையைச் சுத்தி எவ்ளோ கூட்டம் கூடுதுனு மட்டும் பாருங்க தலைவரே!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘வெளியில போயி தண்ணி குடிச்சுட்டு வாங்க... அப்புறமா டெஸ்ட் எடுக்கணும்!’’
‘‘கடை 12 மணிக்குத்தான் திறக்கும் நர்ஸம்மா..!’’
- எல்.இரவி, செ.புதூர்.

‘‘தலைவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தேறும்..?’’
‘‘அது நூறு கண்டெயினர் லாரியைத் தாண்டும்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவரே... நான் பேசறது கேக்குதா?’’
‘‘ஜெயிலருக்கே கேட்டுரும்... மெதுவா பேசு!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘அந்த ஆபீசர் தனக்கு வரியில்லா வருமானம் மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரும்னு சொல்றாரே... அது என்ன?’’
‘‘அவர் வாங்கற லஞ்சத்தைத்தாங்க அப்படி பாலீஷா சொல்றாரு!’’
- சீர்காழி வி.ரேவதி, தஞ்சை.

தத்துவம் மச்சி தத்துவம்

ஒரு வாட்ஸ்அப் குரூப்ல இருக்கப் பிடிக்கலைன்னா, இன்னொரு குரூப்புக்கு மாறிக்கலாம். ஆனா, ‘பிளட் குரூப்’ பிடிக்கலைன்னு மாறிக்க முடியுமா?
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஏ.சி. ஒண்ணரை டன்னா இருந்தாலும், அதனால ஓங்கி அடிக்க எல்லாம் முடியாது!
- ‘சிங்கம்’ பட வசனத்தை வைத்து தத்துவம் சொல்வோர் சங்கம்
- கா.பசும்பொன், மதுரை.