ஜோக்ஸ்
‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல என்ன கேட்டாங்கன்னு தலைவர் இப்படிக் கொதிக்கறார்..?’’ ‘‘ஓட்டுக்கு எப்படியெல்லாம பணம் பட்டுவாடா பண்ணினீங்கன்னு கேட்கறாங்களாம்..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
 தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் போர்ட்டர் பாரம் சுமப்பார்னாலும், அவரை நம்ம குடும்ப பாரத்தையெல்லாம் சுமக்கச் சொல்ல முடியாது! - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘இடைத்தேர்தலிலும் கூட்டணி தொடரும்னு சொன்னதுக்கு மக்கள் என்னய்யா சொல்றாங்க..?’’ ‘‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘செல்போன் டவர் மேலே நின்னு போராட்டம் பண்றியே... ஏன்?’’ ‘‘நீங்கதானே ‘உன் கோரிக்கையை மேலிடத்துலே போய் சொல்லு’ன்னீங்க..!’’ - தாமு, தஞ்சாவூர்.
என்னதான் கிரிக்கெட் வீரரா இருந்தாலும் அவர் அரசாங்க வேலைல சேர்றப்ப அவருக்கு ‘போஸ்டிங் ஆர்டர்தான்’ தரமுடியுமே தவிர, ‘பேட்டிங் ஆர்டரை’யா தரமுடியும்? - கிரிக்கெட் பார்த்துக்கொண்டே கில்லாடித்தனமாக யோசிப்பவர்கள் சங்கம் - இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
‘‘புதுசா வந்த சீடரை அந்த சாமியார் ஏன் ஆசிரமத்தை விட்டு அடிச்சுத் துரத்திட்டாராம்..?’’ ‘‘தவ வாழ்க்கை வாழ ஆசைப்படுவதாக சொன்னாராம் அந்த சீடர்!’’ - சீர்காழி வி.ரேவதி, தஞ்சை.
‘‘ஆச்சரியமா இருக்கு... அந்த ‘பார்’ல ஏன் கூட்டமே இல்லை?’’ ‘‘ ‘பாரடங்கு’ உத்தரவு போட்டிருக்காங்களாம்!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
|