கமென்ட் கோயிந்து
சக்திவேல் மருதமுத்து ஓவியங்கள்: ஜாய்
1,000 அடி உயரத்தில் தொங்கியபடி கல்யாணம் செய்த ஜோடி: செய்தி கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கை அந்தரத்துல தொங்காம இருந்தா சரி...
 நாங்கள் அம்மாவின் அடிமைகள்தான்: அமைச்சர் தங்கமணி உண்மையைத் தயக்கமின்றி ஒப்புக்கொண்டதால், தங்கள் அமைச்சர் பதவி சில மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை...
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம்: செய்தி ‘‘யோவ், குடிச்சிருக்கியா? வண்டிய வச்சிட்டு பத்தாயிரம் ஃபைனை கட்டு!’’ ‘‘வண்டியையே நாலாயிரத்துக்குத்தான் ஏட்டய்யா வாங்குனேன். அத நீங்களே வச்சிக்கங்க... நான் நடந்தே போறேன்!’’
ஓட்டல் சப்ளையராக வேலை செய்யும் அமெரிக்க அதிபரின் மகள்: செய்தி பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கியே! சரி... சரி... எங்க அம்மாகிட்ட வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு, அடுத்த ஐ.நா சபை தலைவருக்கு நில்லு - குன்னூர் எம்.எல்.ஏ
 பீகாரில் மாமியாரை காதலித்து திருமணம் செய்த மருமகன்: செய்தி இந்த மாமியாரோட மாமியார் உயிரோட இருந்தா, தயவுசெஞ்சி அந்த ஆயாவ வேற ஊருக்கு அனுப்பி வச்சிருங்கய்யா... புண்ணியமா போவும்!
|