jokes
‘‘என்னய்யா... கூட்டத்துக்கு வந்திருக்கற தொண்டர்கள் எல்லாம் புதுசா?’’ ‘‘ஆமா தலைவரே! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’ ‘‘ஆச்சரியமா இன்னைக்கு எல்லாரும் கைதட்டறாங்களே!’’
 ‘‘என்னய்யா இது? சாட்சிக் கூண்டுல ஏழெட்டு பேர் கூட்டமா வந்து நிக்கறாங்க?’’ ‘‘அடுத்து புஷ்பா புருஷனை விசாரிக்கணும்னு வக்கீல் கூப்பிட்டாரே... அவங்கதான் இத்தனை பேரும்!’’
‘‘தலைவருக்கு அரசியல் செல்வாக்கு குறைஞ்சிக்கிட்டே வருதுன்னு எப்படிச் சொல்றே..?’’ ‘‘இப்பல்லாம் அவரை வச்சு ஒரு மீம்ஸ் கூட செய்யறதில்லையே!’’
‘‘கட்சியில நடிகைகளை சேர்த்தது தப்பா போச்சா... ஏன் தலைவரே?’’ ‘‘பொதுக்கூட்டத்துக்கு வரணும்னாகூட கேரவன் கேக்கறாங்களே!’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
|