நம் அனைவருக்குள்ளும் ஒரு வனமகன் இருக்கிறான்..!



-மை.பாரதிராஜா

ஜிம் ஃபிட்னஸ் ட்ரெய்னரைப் போல செம ஃபிட் லுக்கில் காட்சி தருகிறார் ஜெயம் ரவி. ‘வனமகன்’ பென்ட் நிமிர்த்தியதில் கிடைத்த கிஃப்ட் அது. ‘‘பொதுவா காட்டுல இருக்கறவங்க எப்பவும் ஓடியாடி துறுதுறுனு இருப்பாங்க. துரத்தித் துரத்தி வேட்டையாடுவாங்க. காடுகள்ல சுற்றுச்சூழல் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

அந்த ஜனங்க செம ஆக்ட்டிவ்வா இருப்பாங்க. அதனால தங்களோட உடம்பை கட்டுக்கோப்பா, ஸ்லிம்மா வச்சிருப்பாங்க. ‘வனமகன்’ல நான் ஆதிவாசி கேரக்டர் பண்றதால பதினைந்து கிலோ எடையை குறைக்க வேண்டியிருந்தது. அந்த வெயிட் லாஸ் அடுத்த படமான ‘டிக்டிக்டிக்’கிலும் யூஸ் ஆகுது!’’ உற்சாகப் புன்னகையில் பூரிக்கிறார் ஜெயம் ரவி.

‘‘இயக்குநர் விஜய்க்கும் எனக்கும் மறக்கமுடியாத படம் ‘வனமகன்’. மேக்கிங், ஆக்ட்டிங் ரெண்டிலும் ரொம்பவே டஃப்பான படம். எந்த மொழிலயும் எடுக்கத் தயங்கற கான்செப்ட். Tribes பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, விஜய் என்கிட்ட இந்தப் படத்தோட கதையை சொன்னப்ப, ஆச்சரியமாகிடுச்சு.

என்னோட கேரக்டருக்காக நிறைய ரிசர்ச் பண்ணினேன். ஆதிவாசிகள் பத்தின டாகுமெண்ட்ரிஸ் பார்த்தேன். அடர்ந்த காடுகள் எங்கெல்லாம் இருக்குதோ, அங்கெல்லாம் நிச்சயம் ஆதிவாசி மனிதர்கள் வாழ்றாங்க. இயற்கையோடு வாழ்றதுதான் அவங்க பலம். நகரத்தில் வாழ்ற நாம சிறந்தவர்களா? இல்ல ஆதிவாசிகள் சிறந்தவர்களா? இதுதான் ‘வனமகன்’.

இந்தப் படத்துல லொகேஷன் ரொம்ப ஸ்பெஷல். அவ்வளவு அழகு. ஒளிப்பதிவாளர் திருவும் இயக்குநர் விஜய்யும் தேடித் தேடி லொகேஷனை கண்டுபிடிச்சிருக்காங்க. படத்துக்காக 55 மரங்களுக்கு மேல ஏறி இறங்கி தாவியிருக்கேன். ஸ்டண்ட் சிவா எப்பவும் எங்க கூடவே இருப்பார். படத்துல முக்கியமான ஒரு எபிசோட் வச்சிருக்கோம். அது சஸ்பென்ஸ்.

ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டீங்க போல..?
பின்னே... சுனாமி வந்து புரட்டிப் போட்டபிறகுதானே அப்படி ஒண்ணு இருக்குனு நமக்குத் தெரியும்? பறவைகள், விலங்குகள் மாதிரி ஆதிவாசி மனிதர்களுக்கும் சுனாமியை முன்கூட்டியே உணர்ற சக்தி இருக்கு. இந்த விஷயம் காடுகள்ல சுத்தினப்பதான் தெரிஞ்சது. இன்னமும் வனவாசிங்க நம்ம பழக்க வழக்கங்களை பழகிக்கலை. உண்மைல நம்ம எல்லார்க்குள்ளயும் ஒரு ஆதிவாசி வாழ்ந்துகிட்டுதான் இருக்கான். டெக்னாலஜி, ஆடம்பரத்தால அவனை யார் கண்ணுக்கும் தெரியாம நாம மறைச்சு வச்சிருக்கோம். படத்துல பிரகாஷ்ராஜ், தம்பிராமையா, ஹீரோயின் சாயிஷா சைகல்னு நிறைய ஸ்டார்ஸ் கலக்கியிருக்காங்க.

இந்த படத்துக்கு மும்பை ஹீரோயின் ஏன்..?
டைரக்டரோட சாய்ஸ் அது. நியூ ஃபேஸ் இருந்தா, கேரக்டர் பேசப்படும்னு நினைச்சார். சாயிஷா சைகல் அஜய் தேவ்கன் கூட ‘ஷிவாய்’ல பிரமாதமா நடிச்சிருப்பாங்க. டான்ஸர். அவங்களுக்கு தமிழ்ல நல்ல எதிர்காலம் இருக்கு. பெரிய ரவுண்ட் வருவாங்க. அவங்க பாலிவுட் நடிகர் திலிப்குமாரோட பேத்தி! 

‘ரவி என் தம்பி’னு இயக்குநர் விஜய் சிலாகிச்சிருக்காரே..?
விஜய் ரியலி ஸ்வீட் பர்சன். ஸ்வீட்னா.. அப்படி ஒரு ஸ்வீட். அவர் எங்க ஃபேமிலில ஒருத்தர். நானும் அவரும் ஒண்ணா ஒர்க் பண்ணணும்னு ரொம்ப வருஷமா பேசிட்டு இருக்கோம். ‘வனமகன்’ வழியா அது நிறைவேறியிருக்கு. எங்க அண்ணன் மோகன் ராஜா மாதிரி அவரும் கடின உழைப்பாளி.

மனம் நோகாம வேலை வாங்கிடுவார். வியட்நாம் காடுகள்ல ஷூட் போனப்ப, கரடு முரடான சாலைல கார் போச்சு. ஸ்பாட்டுக்கு போனப்ப நள்ளிரவு மூன்றரை மணி. எல்லாரும் செம டயர்டா இருந்தோம். ஆனா, அவர் மட்டும் காரை விட்டு இறங்கினதும் ‘வியட்நாம்... ஒண்டர்ஃபுல் வியட்நாம்!’னு ஜாலியா பாட ஆரம்பிச்சிட்டார்! அதோட என்கிட்ட ‘ரவி நாளைக்கு எல்லாரையும் காலை ஏழு மணிக்கு வரச் சொல்லியிருக்கேன். நீங்க கொஞ்சம் லேட்டா வாங்க’ன்னார். எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆச்சு. ‘எப்ப வரணும்’னு கேட்டேன். ‘7.15க்கு வந்தா போதும் ரவி’ன்னார்! அதனாலதான் சொல்றேன்... அவர் ஸ்வீட் பர்சன்!

இது ‘டார்ஜான்’, ‘அபோகலிப்டோ’ மாதிரி இருக்கும்னு சொல்றாங்களே...
‘பேராண்மை’ல நானே பழங்குடியினரா நடிச்சிருக்கேன். மறுபடியும் காடுகள் சார்ந்த சப்ஜெக்ட் பண்றேன்னா... நிச்சயம் புதுசா ஒரு விஷயம் எதிர்பார்க்கலாம். ஒரு  படம் நம்மை இம்ப்ரஸ் பண்ணும்போதுதான் அதே மாதிரி படம் செய்யணும்னு தோணும். இப்ப ‘ரோமியோ ஜூலியட்’டை எடுத்துப்போம். இதைவிட எவ்வளவோ காதல் கதைகள் வந்திருக்கு.

நாமும் பார்த்திருக்கோம். ஆனா, ‘ரோமியோ ஜூலியட்’ ஏன் பேசப்பட்டது? அது என்னோட விஷன். என் பார்வைல அது எப்படி இருக்கு? இதுதான் முக்கியம். இங்க ‘என்’னு நான் குறிப்பிட்டது ஜெயம் ரவியை இல்ல. அந்த கேரக்டரை. நம்ம கையெழுத்தையே நம்மால ஒரே மாதிரி திரும்பத் திரும்ப போடமுடியாது.

வித்தியாசங்கள் வரத்தான் செய்யும். ஆதிவாசினா ‘டார்ஜான்’தான். அவங்க இன்னமும் ரத்தமும் சதையுமா காடுகள்ல வசிக்கிறாங்க. ‘வனமகன்’ எதனோட காப்பியும் இல்ல. ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் ரொம்ப சிறப்பா வந்திருக்கு. ஒளிப்பதிவாளர் திருவோட கோணங்கள் நம்ம கண்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும்.

காடுகளுக்காக எங்கெல்லாம் பயணமானீங்க?
அந்தமான், தலக்கோணம், வியட்நாம்னு பறந்து பறந்து படமாக்கிட்டு வந்திருக்கோம். தலக்கோணம் காட்டுக்குள்ள குடிசைகள் செட் போட்டு நாற்பது நாட்கள் ஷூட் செஞ்சோம். வியட்நாம்ல ஷூட் பண்ணும்போது எங்க இடத்துக்கு பக்கத்துல சின்னதா ஒரு ஆறு ஓடிக்கிட்டிருந்தது. இரு கரையோட அகலமும் குறைவு.

அந்த நதியோட ஒரு கரைல இருந்த கல்லுல நான் இருந்தேன். என் பக்கத்துல இருந்த சாயிஷா, டான்ஸ் ஆடறப்ப பேலன்ஸுக்காக எதிர்க் கரைல இருந்த கல்லுல கால் வைக்கப் போனாங்க. அந்த கல்லுக்கு பக்கத்துல இருந்த ஆட்கள், சீன அரசாங்க அதிகாரிகளாம். ‘இந்தக் கல்லுல நீங்க கால் வைக்கக்கூடாது. அப்படி வைக்கணும்னா நீங்க சீன விசா வாங்கியிருக்கணும்’னு சொன்னாங்க! எல்லாரும் ஷாக் ஆகிட்டோம்.

அடுத்து நடிக்கும் ‘டிக்டிக்டிக்’ எப்படி போகுது?
கிட்டத்தட்ட 65% படப்பிடிப்பு முடிஞ்சிடுச்சு. இதுவரைக்கும் இந்தியாவுல யாரும் ட்ரை பண்ணாத ஒரு படம். ‘மிருதன்’ சக்தி சௌந்தர்ராஜன் இயக்கறார். ‘வனமகன்’ல ரோப் கட்டி தொங்குற சீன்களை எண்ணிடலாம். ஆனா, இது ஜீரோ கிராவிட்டி படம். எந்நேரமும் அந்தரத்துல இருக்கணும். ரொம்ப டஃப்பான மேக்கிங். இருந்தாலும் எல்லாருக்கும் புரியக் கூடிய எளிமையான கதை.