கிட்னி தானம்!



சாத்தூர் காபி பாரில் ‘டீ வாங்கி கொடுடா...’ என்றாலே, ‘டீ? வித் பட்டர் பிஸ்கட்டா?’ என லந்து பண்ணி புன்னகைக்கும் ஆத்ம நண்பர்களை பெற்றிருக்கும் நமக்கு இது புதுசுதான். யாரென்றே முகம் தெரியாத ஒருவருக்கு தன் கிட்னியை எடுத்துக் கொடுப்பது என்றால் சும்மாவா? அமெரிக்காவின் ஒக்லஹாமாவின் துல்ஸா நகரைச் சேர்ந்த பார்ஷியன் என்பவர் ரெட்டிட் தளத்தில் பதிவிட்ட கடிதம் மூலம் இந்த கிட்னி தானம் குறித்த நெகிழ்ச்சி செய்தி உலகிற்கு தெரிய வந்தது.

‘நான் வேலை செய்து வரும் டயாலிசிஸ் மையத்தில் கிட்னிக்காக 10 ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் பட்டியல் கண்ணீரை வரவைத்துவிட்டது. அதனால் என் கிட்னியை அவர்களில் ஒருவருக்கு வழங்கினேன்...’ எனக் கூறும் பார்ஷியன், தன் கிட்னியை ஜனவரியில் தானமளித்தார். தானம் பெற்றவர் ஏப்ரலில் பார்ஷியனுக்கு அனுப்பிய கடிதத்தில் ‘இன்று நான் வாழும் வாழ்க்கை நீங்கள் எனக்களித்த கொடை!’ என உருகியிருக்கிறார்.   

-ரோனி