ஜிஎஸ்டி பேபி!இன்று ஊர் வாய்க்கு கிடைத்த கிலோ கணக்கிலான அவல் - ஜிஎஸ்டி மேட்டர்தான். கடந்த 30ம் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை பின்னாளில் மக்கள் மறந்தாலும் ஜிஎஸ்டி என்ற பெயரை யாரும் மறக்கமுடியாதபடி ராஜஸ்தான் பெண்மணி செய்துவிட்டார். பேவா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஜூலை 1 அதிகாலை 12.02 மணிக்கு குழந்தை பிறந்தது.

அதேசமயம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியும் அதிரடியாக அமலுக்கு வந்தது. நாடே அமளிதுமளியானது. போதாதா? தன் குழந்தைக்கும் ‘ஜிஎஸ்டி’ என பெயர் வைத்துவிட்டார் இந்த ராஜஸ்தான் தாய்! தகவல் அறிந்ததும் பாஜக ஆதரவாளர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து விட்டார்கள்.