ஐன்ஸ்டீனை முந்திய ஐக்யூ சிறுவன்!



முக்கு கடை அண்ணாச்சி கடையில் வாங்கிய பால், ரஸ்குக்கான காசு போக பேலன்ஸ் எவ்வளவுப்பா தரணும்... கால்குலேட்டரை தேடும் நம் ஐக்யூவை வைத்து அண்ணாச்சியையே ஜெயிக்க முடியாது. இந்த லட்சணத்தில் ஐன்ஸ்டீனை எல்லாம் நினைத்துப் பார்க்கலாமா? ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் இறந்தகால, சமகால ஜீனியஸ்களை எல்லாம் தன் ஐக்யூவால் அதிரடியாக ஓவர்டேக் செய்திருக்கிறான்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அர்னாவ் சர்மாதான், அந்த ஐக்யூ அறிவாளி. ஐக்யூ டெஸ்ட் நடத்தும் மென்சா என்பது 1946ம் ஆண்டு தொடங்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அமைப்பு. இதில் கலந்துகொண்ட இந்தியப் பூர்வீகச் சிறுவனான அர்னாவ் சர்மா, தேர்வு மதிப்பெண், ரீசனிங் திறன் மூலம் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் என இருவரின் ஐக்யூ பாய்ண்ட்களையும் எளிதாகக் கடந்து சாதித்திருக்கிறான். பெற்றோர்கள் பதற்றமாக இருந்தாலும் இரண்டரை மணிநேர ஐக்யூ டெஸ்ட்டை பிரிப்பரேஷனே இல்லாமல் அசால்ட்டாக எழுதி முடித்து அர்னாவ் பெற்ற ஐக்யூ பாய்ண்ட் 162.   

-ரோனி