மாமனிதர்!



சைபர் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆன்லைன் ஆர்மி இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்று தான்.
- த.சிவக்குமார், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; நவாப், திருச்சி.

பேசாமொழியில் திகில் கிளப்பும் ‘மெர்க்குரி’ பட டீட்டெய்ல்கள் சொன்ன கார்த்திக் சுப்புராஜ் பேட்டி அசத்தல்.
- நரசிம்மராஜ், மதுரை;

மீனாட்சி, திருமுல்லைவாயில்; நாகராஜன், திருச்சி; சங்கீதசரவணன், மயிலாடுதுறை;
த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சிறுவயதில், தான் பார்த்த மங்களாம்பிகா மெஸ் சுப்பிரமணியத்தை நடிக்க வைத்த ஷங்கர், சினிமா உலகில்  மாமனிதர்தான்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சிதம்பரக்குமாரசாமி, அசோக்நகர்; ராமகண்ணன், திருநெல்வேலி; லட்சுமி  நாராயணன், வடலூர்; முத்துவேல், கருப்பூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தேவா,  கதிர்வேடு.

மனைவி நூல்கள் எழுதுவதற்காக தன் வேலையை ராஜினாமா செய்த சுரேஷ் - வித்யாபவானி தம்பதியினரின்  கலாசாரம் காக்கும் பணி வாழ்க!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

அரசு பள்ளிகளை ஆசிரியர்களோடு இணைந்து வலுவாக்கும் ராஜசேகரின் பணி, பெருமிதம்!
- எஸ்.நாகராஜன், திருச்சி; சோழா புகழேந்தி, கரியமாணிக்கம்; மோகன், சென்னை; ஆனி அஞ்சலின், சென்னை;  மனோகர், கோவை; ராஜ்குமார், குன்னூர்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; பிரதீபா ஈஸ்வரன், சேலம்.

‘கந்தல்’, ‘நினைவுகள்’ இரு கவிதைகளும் சிறப்பு. இதில் கந்தல் சாமுத்திரிகா பட்டுபோல இதயத்தை  வசீகரித்துவிட்டது.
- விஜயநிர்மலன், சென்னை; நவாப், திருச்சி.

AI தொழில்நுட்பத்தை எளிமையா தெளிவா சுருக்கமாக சொன்ன ‘குங்கும’த்திற்கு சூப்பர் ஷொட்டு!
- மயிலைகோபி, அசோக்நகர்; நவாப், திருச்சி.

அருண்சரண்யாவின் ‘சோதனை’ சிறுகதையை தவிப்பும், மன நெகிழ்ச்சியுமாக படித்தோம்.
- நம்ஷிகா, கருப்பூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; சித்ரா, திருவாரூர்.

வைட்டமின் டி பற்றிய மருத்துவ மாயைகளை விலக்கி உண்மையை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு; தேவதாஸ், பண்ணவயல்; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; வளையாபதி,  தோட்டக்குறிச்சி; சித்ரா, திருவாரூர்; கைவல்லியம், மானகிரி.

லன்ச் மேப்பில் மங்களாம்பிகாவின் கடப்பா, வெந்தயதோசையை விவரித்தது சாப்பிட்டது போல சூப்பர் ருசி.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; வரலக்ஷ்மி முத்துசாமி, முகப்பேர்.

சிலம்பாட்ட சாம்பியன் சிங்கமான கௌசிக் பழனிச்சாமி போன்ற யூத்களின் முயற்சிகளே பாரம்பரிய  தொன்மைக்கலைகளைக் காப்பாற்ற உதவும்.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.