சானியா ஆக சானியா!



இது விளையாட்டு வீராங்கனைகளின் சீசன் போல! குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், ‘இறுதிச் சுற்று’ வழியே நடிகையானார்; தொடர்ந்து நடித்தும் வருகிறார். இதனையடுத்து விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி படம் எடுப்பதும் அதிகரித்தது.

‘மேரி கோம்’ ஆக பிரியங்கா சோப்ரா நடித்ததுபோல் பேட்மின்டன் ப்ளேயர் சாய்னா நேவாலின் வாழ்க்கையில் ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இந்நிலையில்தான் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் லைஃப் படமாவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் சானியா மிர்ஸாவாக நடிக்கப் போகிறவர் வேறு யாருமல்ல. சானியா மிர்ஸாவே தான்!

- காம்ஸ் பாப்பா