Dhanush அஞ்சு பஞ்ச்
* ஸ்னூக்கர் விளையாடப் பிடிக்கும். நண்பர்களோடு சேர்ந்து விளையாட அம்மா வீட்டில் தனி அறை உண்டு.
* அண்ணன், அக்கா போல பெரிதாகப் படிக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. அதற்காகவே பயிற்சி எடுத்து நல்ல ஆங்கிலத்தில் உரையாடுகிறார்.
 * ஒரு சமயம் புன்னகைக்க மறந்திருந்த தனுஷும், சிம்புவும் இப்போது திக் ஃப்ரண்ட்ஸ். வாரம் ஒருமுறை சந்திக்கிறார்கள்.
* ரஜினியை எப்போதும் ‘சார்’ என்றே அழைக்கிறார். மறந்துவிட்டு ‘மாமா’ என்றால் ரஜினி சிரித்துக் கொள்வார்.
* சினிமாவாக ஆக்க நல்ல நாவல்களைத் தேடுகிறார். இதற்காக பூமணி உட்பட பல எழுத்தாளர்களை சந்தித்திருக்கிறார்.
|