Coffe table



ரிட்டர்ன்

தீபிகா படுகோனேவும், ரன்வீரும் ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என இனிக்கிறார்கள்! சமீபத்தில் ஒர்க் ட்ரிப்பாக பாரீஸ் சென்றது இந்த ஜோடி. அங்கே ஈபிள் டவரை தன் மொபைலில் க்ளிக்கி இன்ஸ்டாவில் பதிவிட்டார் தீபி. ஒரே நாளில் 12 லட்சம் லைக்குகளை அள்ளியிருக்கிறது அந்த க்ளிக்! பாரீஸில் இருந்து போஸ்ட் செய்த ஜோடி, அடுத்த நாளே அங்கிருந்து கிளம்பி மும்பை வந்துவிட்டது. ரன்வீர்சிங்கின் ‘ஹல்லி பாய்’ படத்தின் புரொமோஷனுக்காகத்தான் இப்படி அவசர ரிட்டர்ன் என்கிறது மும்பை வட்டாரம்.

பீதி

உலக மக்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் 10 காரணிகளை வருடா வருடம் வெளியிட்டு பீதியைக் கிளப்புவது உலக சுகாதார நிறுவனத்தின் வழக்கம்.
அப்படி இந்த வருடத்தில் பீதியைக் கிளப்பும் முக்கிய காரணி தடுப்பூசி! ‘‘இந்தியாவில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு போதுமான அளவுக்கு இல்லை. அது குறித்த பயமே இங்கு அதிகமாக நிலவுகிறது...’’ என்கிறது அந்த ஆய்வு. காற்று மாசு, உடல் பருமன், நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வேலை செய்யாமல் போவது போன்றவை மற்ற காரணிகளில் முக்கியமானவை.

அதிர்ச்சி


தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை விட நாய்கள் விற்பனை அதிகரித்திருக்கிறது! இதற்கான காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைய வேண்டாம். ‘‘குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவாகிறது. அதே நேரத்தில் குழந்தை வளர்ப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு பதில் செல்லப் பிராணிகள் எல்லா வகையிலும் ப்ளஸ்...’’ என்று சாந்தமாகச் சொல்கிறார் ஒரு பெண்.  தனது செல்ல நாய்க்குட்டிக்கு குழந்தையைப் போல ஆடை அணிவித்திருந்தார் அவர்!

ஒயர்லெஸ் கீபோர்டு

கம்ப்யூட்டரிலிருந்து பத்து அடி தொலைவுக்குள் இயங்கும் ஒயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் அடங்கிய காம்போ பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ‘ராபூ’ நிறுவனம். ஒரு வருடத்துக்கு நிற்கும் பேட்டரி திறன், லைட் வெயிட், கவர்ச்சியான வடிவமைப்பு என கெத்து காட்டுகிறது இந்த கேட்ஜெட். விலை ரூ.1,079.

பக்தி


‘மணிகர்ணிகா-  த குயின் ஆஃப்  ஜான்சி’ சுமுகமாக  ரிலீஸ் ஆகவேண்டும், பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி தேவியின் கோயிலுக்குச் சென்று வந்திருந்தார் கங்கணா ரனாவத். அந்தத் தருணத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர, அவரது பக்தி வைரலாகிவிட்டது.