5 star



பிகினி பேபி!

தமிழில் ஹோம்லி கோதாவரியாக கரைபுரண்டு ஓடும் ராய்லட்சுமி, இன்ஸ்டாவில் மட்டும் பிகினி பீச் பேபி!சம்மரை சமாளிக்க ரிலாக்ஸ் ட்ரிப்பாக தாய்லாந்து பறந்து வந்திருக்கிறார் ராய். அங்கே நாளொரு நீச்சலுடையும், பொழுதொரு கடற்கரை க்ளிக்குமாக ஷூட் செய்து குஷியாகியிருக்கிறார்!இந்தி ‘ஜூலி 2’ மாதிரி கோலிவுட்டிற்கும் தயவு காட்டுங்க பேபி!

சேவை!

யூனிசெஃப்பின் உதவியுடன் தொடர்ந்து தன்னார்வத் தொண்டுகள் புரிந்து வரும் பிரியங்கா சோப்ரா, இப்போது ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவிற்கு சென்று வந்திருக்கிறார்.அங்குள்ள கறுப்பினப் பெண்களின் அழகைப் புகழ்ந்து தள்ளும் பிரியங்கா, அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான sahle-work zewdeவை சந்தித்தும் வாழ்த்து பெற்று வந்திருக்கிறார்!

உருக்கம்!

‘தமிழ்ப்படம் 2’ ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன், இப்போது கன்னடத்தில் பரபரக்கிறார்.சென்னையில் எலெட்ரானிக்ஸ் என்ஜினியரிங் முடித்த ஐஸ், ஒரு தத்துபித்து கேர்ள்! சமீபத்தில் தன் செல்ல நாய்க்குட்டி ஆசையாக ஓடி வந்து ஐஸின் முகத்தில் முத்தமழை பொழிந்ததில் மயங்கிக் கிறங்கிவிட்டார்.‘‘உலகின் சிறந்த மனநல மருத்துவர் என்றால் அது என் க்யூட் நாய்க்குட்டிதான்’’ என்று உருகுகிறார்!

ட்ரீம் கேர்ள்!

இந்த சம்மர் வெக்கேஷனை மும்பையில்தான் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் வேதிகா. ‘இதில் மிராக்கிள் என்ன இருக்கு? அங்கேதானே அவர் வீடு இருக்கு?’ என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.வேதியின் ஹேப்பிக்கு காரணம், மும்பை கேட்வே ஆஃப் இண்டியா ஏரியாவில் விளம்பர ஷூட் ஒன்றுக்காக சென்றதுடன் அங்கே ஆசை தீர படகுசவாரி செய்ததும்தான்!நீண்ட நாள் கனவாம். நிறைவேறியதில் பொண்ணு செம ஹேப்பி.

சமத்து!

டோலிவுட்டில் மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சமந்தா. ‘‘சென்னையை மறந்துட்டீங்க போல..’’ எனக் கேட்டால், வாய் நிறைய புன்னகைக்கிறார்.‘‘யார் சொன்னது? சென்னை எப்போதுமே எனக்கு மிக நெருக்கம்தான். இங்க வந்தாலே ஞாபகங்கள் தாலாட்டும். இங்கிருக்கும் பல்லாவரம் தொடங்கி ஒவ்வொரு ரோட்டுக்கும் இனிப்பான ஒரு கதை இருக்கு!’’ என பூரிக்கிறார் சமத்தாக!l

தொகுப்பு: மை.பாரதிராஜா