விஜய் ப்ளே ஸ்டோர்



கையிலிருப்பது: ஆப்பிள் லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைல், ஆப்பிள் ஐபேட்.

ஹாபி: பாட்மின்டன், கார் டிரைவிங்.

ராசி: கடகம்.

ரசித்து உண்பது: தோசை, மட்டன் குழம்பு. தோசையை வார்த்ததும், அதை திருப்பிப்போடாமல் ஒரு பக்கம் வேகவைத்துவிடுவது பிடிக்கும்!

ஷூட்டிங் பிரேக்குகளில் விரும்புவது: சைலன்ஸ், ஐபேடில் பிரௌஸிங்.

குட் ஹேபிட்: வீட்டு ஹோம் தியேட்டரில் தினமும் ஒரு ஆக்‌ஷன் படமாவது பார்ப்பது. ஆனால், மூவி கலெக்‌ஷன் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.

பிடித்த வார்த்தை: ‘என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களே...’

கைதூக்கிவிட்ட இயக்குநர்களில் பிடித்தவர்: எஸ்.ஜே.சூர்யா.

ரஜினியின் நடிப்பில் பிடித்த படம்: ‘அண்ணாமலை’.

மொபைல் ஸ்கிரீன் சேவர்: மேரி மாதா.

கலெக்‌ஷன்: காஸ்ட்லி கார் பிரியர்.ரோல்ஸ் ராய்ஸிலிருந்து மினி கூப்பர் வரை வைத்துள்ளார்.

காரில் எப்போதும் இருப்பது: கவுண்டமணி- செந்தில் காமெடி கலெக்‌ஷன்!

தொடரும் பழக்கம்: அதிகாலை 3 மணிக்கு ஷூட் முடித்து உறங்கச் சென்றாலும், ஷார்ப்பாக 6 மணிக்கு எழுந்து அன்றைய நாளிதழைப் படித்துவிட்டே பேலன்ஸ் ஸ்லீப்பை தொடர்வார்.

இளமையின் ரகசியம்: லிமிட்டான ஒர்க் அவுட், டின்னரை மாலை 6.30க்குள் முடித்துவிடுவார்.

அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘உன்னால் முடியும்!’

மை.பா