அஞ்சு பன்ச் -வெற்றி மாறன்
 *தனுஷ் நெருங்கிய நண்பர்தான். ஆனாலும் முரண்படுவார்கள். அவர்களின் மன ஒற்றுமையே இத்தனை நாள் அவர்களை நெருக்கி வைத்திருக்கிறது. *கிளி, புறா, பூனை, நாய் வளர்க்கிறார். தெருவில் சுகவீனமான நாயைக் கண்டாலும் எடுத்துக்கொண்டு மருத்துவரைத் தேடிப் போவார்.
*சினிமாக்காரர் என்ற அடையாளத்தோடு அவரைப் பார்க்க முடியாது. சாதாரண செருப்பு, உடைகளோடு எங்கும் சுலபமாக வெளிப்படுவார்.
*கதை அமைந்தால்தான் படம் பண்ணுவார். 2007ல் ஆரம்பித்த அவரது சினிமாப் பயணம் இப்போது வரை ஐந்து படங்களிலேயே இருக்கிறது.
*ஒரு நாளும் தன் பெர்சனல் வேலைகளுக்கு உதவியாளர்களைப் பயன்படுத்த மாட்டார். தொடர்ந்த படப்பிடிப்பாக இருந்தாலும், அவரே கார் ஓட்டிச் செல்வார்.
நன்மதி
|