ஃபேஷன்... நேஷன்!



அஜித் பற்றிய பதினொரு தகவல்களும் ‘தல’ சிறந்தவை. அதிலும் மாலை ஆறு மணிக்கு மேல் ஃபேமிலி டைம் என்று குறிப்பிட்டிருப்பது அவருக்குக் குடும்பத்தின் மீது இருக்கும் ‘விஸ்வாசத்’தைக் காட்டியது.
- க.நஞ்சையன், பொள்ளாச்சி; அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை; முரளி, சென்னை; அ.யாழினி பர்வதம், சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; கதிர், திருநெல்வேலி; பார்வதி, சென்னை; தெய்வசிகாமணி, வேளச்சேரி.

இங்கு பல கோடி மக்கள் ஒரு வேளைச் சோற்றுக்கே வழியின்றி வாடிக் கிடக்கும்போது பல கோடிகளைச் சுருட்டி சுவிஸ் வங்கியில் பதுக்கும் அவலத்தை சொடக்குப் போட்டு சுட்டிக் காட்டிவிட்டீர்கள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; இலக்சித், மடிப்பாக்கம்; ஜெயசந்திர பாபு, சென்னை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

ஃபேஷன் உலகின் உச்சகட்ட மாற்றங்கள், நமது நேஷனையும் தாக்கிடுமோ என்கிற கேள்வியோடு முடிந்திருந்த ‘இதுதாம்பா FASHION’ கட்டுரைக்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.
- ஜெர்லின், ஆலந்தூர்; ஆத்மநாதன், ஆற்காடு; முரளி, நங்கநல்லூர்; கவுரிநாத், பரங்கிமலை; சூர்யகணேஷ், சென்னை; கண்ணன், திருவாரூர்.

ஒடிசா புயல் பற்றிக் குறிப்பிடும்போது தமிழகத்தில் நிகழ்ந்த வெவ்வெறு புயல்களின் தாக்கங்களை விலாவாரியாகத் தந்தது சிறப்பு.
- இராம.கண்ணன், திருநெல்வேலி; சாய்கவின், பொள்ளாச்சி; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; இலக்சித், மடிப்பாக்கம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; நரசிம்மராஜ், மதுரை; கவுரிநாத், பரங்கிமலை.

மின்சாரமோ வேறு எந்த வசதியுமோ இல்லாமல் வாழும் பேராசிரியர் ஹேமா ஷனேவின் வாழ்க்கை புனிதம்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்; மியாவ்சின், கே.கே.நகர்; அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; எல்.இரவி, செ.புதூர்; கைவல்லியம், மானகிரி.

நமது கிரிக்கெட் வீரர்களின் மட்டையடி சாதனைகளுக்குப் பின்புலத்தில் இருப்பது அவர்களின் மனைவிகளே என்பது புகைப்படங்களைப் பார்த்த போது புரிந்தது.
- மியாவ்சின், கே.கே.நகர்; அமிர் பத்ரா, சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; முரளி, நங்கநல்லூர்; பிரேமா பாபு, சென்னை.

சிந்துவின் இலக்கியப் பணியும் அதனுடன் இணைந்த அவரின் பார்வையும் முற்றிலும் மாறுபட்டவை.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; அ.யாழினி பர்வதம், சென்னை; கருணாகரன், போரூர்; ஆத்மநாதன், ஆற்காடு.

‘‘நான் நடிகன்தான். ஆனால், ஹீரோ இல்லை...’’ என்றது எஸ்.ஜே.சூர்யாவின் தன்னடக்கத்தைக் காட்டியது. ப்ளே பாயாக அறிமுகமானவர் பக்குவமாகி விட்டாரே!
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ப. மூர்த்தி, பெங்களூரு; ஜெயசந்திர பாபு, சென்னை.
 
ரீடர்ஸ் வாய்ஸ்