NUMBER'S MATTER!



1. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதி ஒன்றே ஒன்று. அது சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலி.

2. தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில்
ஓரிடத்தில்கூட பாஜக வெற்றி பெறவில்லை.

3. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி திமுக. பாஜக 303, காங்கிரஸ் 52, திமுக 23.

4. நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோருக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகி இருக்கிறார் மோடி.

5. தமிழகத்தில் நான்கு, கேரளத்தில் ஒன்று என மொத்தம் ஐந்து கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வட மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட
கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறவில்லை.

78. இந்த மக்களவைத் தேர்தலில் எழுபத்தெட்டு பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வளவு பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

10.பத்துக்கும் மேற்பட்ட
மாநிலங்களில் அனைத்துத் தொகுதி
களையும் தேசிய ஜனநாயக முன்னணி
கைப்பற்றியுள்ளது.

15. பதினைந்து மாநிலங்களில் தேசிய ஜனநாயக முன்னணி
50 சதவீதத்திற்கு மேல்
வாக்குகள் பெற்றிருக்கிறது.

100. போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வென்று சதமடித்த ஒரே பெரிய கட்சி திமுக மட்டுமே.