சிரிங்க பாஸ்



* வேமாஜி

“தபால்காரர் வேகமா ஓடி வந்து என்ன கொடுத்துட்டுப் போறாரு?” “ஸ்பீட் போஸ்ட்!”

“அந்த ரிஷி ஏன் கத்திப் பேசறாரு?” “அவர்தான் ‘சப்த’ ரிஷி!”

“ரேஷன் கடைல வேலை பார்த்தவர்தான் போலி டாக்டரா இருக்காருன்னு எப்படிக் கண்டுபிடிச்ச?”“‘எனக்கு ஷுகர் எவ்வளவு டாக்டர்’னு கேட்டா ‘ரேஷன் கார்டு பச்சையா வெள்ளையா’ன்னு கேட்கறாரே!”

“தாத்தாவுக்கு மெமரி லாஸ் வந்திருக்கு...”“அப்ப மெமரி கார்ட் வாங்கிக் கொடுத்துடுங்க!”

“புலவரே... இனியவை நாற்பது பாடுங்கள்”“லட்டு, ஜாங்கிரி, மைசூர்ப்பாகு, கேரட் அல்வா…”

“அந்தப் பாடகர் ஏன் குளிச்சுட்டு ஃப்ரெஷ்ஷா மேடைக்கு வந்திருக்காரு?”“‘சுத்த’ தன்யாசி ராகம் பாடப்போறாராம்!”

‘‘நாடகத்துல இவ்வளவு கதாபாத்திரங்களை கதாசிரியர் வைச்சிருக்காரே?”“அவர் எவர்சில்வர் பாத்திரக்கடை வைச்சிருக்காராம்!”

“அமைச்சரே, புலவர் என்னைப் பற்றிப் புறநானூறு பாடுகிறேன் என்கிறாரே?” “ஆம் மன்னா! நீங்கள் இது வரை நானூறு முறை எதிரியிடம் புறமுதுகிட்டு ஓடி வந்திருக்கிறீர்களாம்!”  

“ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு அவர் ஏன் மாட்டை கூட்டிக்கிட்டுப் போறாரு?”“வாய்ஸ் மாடுலேஷன் பார்க்கவாம்!”

“அந்த பேஷன்ட் ஏன் சர்ஜரி வேணாம்னு சொல்றாரு?”“பின்னே... அது பிளாஸ்டிக் சர்ஜரியாச்சே? அரசாங்கம்தான் பிளாஸ்டிக்குக்கு தடை போட்டிருக்கே!”