ஒரு புறாவின் விலை ரூ.9.7 கோடி!



இதுவரை உலகில் நடந்த அதிமுக்கியமான புறா பந்தயங்களில் எல்லாம் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்ற புறாவின் பெயர், ‘அர்மாண்டோ’. பந்தயப் புறாக்களை ஏலம் விடும் தளமான ‘பிபா’, அர்மாண்டோவையும் ஏலம் விட்டது. வெளியில் பெயர் சொல்ல விரும்பாத சீனர் ஒருவர் அர்மாண்டோவை 1.25 மில்லியன் யூரோவிற்கு ஏலம் எடுத்திருக்கிறார்.

அதாவது இந்திய மதிப்பில் ரூ.9.7 கோடி!பந்தயப் புறாக்களை ஏலம் விடும் வரலாற்றில் இந்த அளவுக்கு எந்தப் புறாவும் விலை போனதில்லை. இதற்கு முன்பு அதிகபட்சமாக ஒரு புறா இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. ‘குறைந்த நேரத்தில் அதிக தூரத்தைக் கடந்த பெல்ஜியம் புறா’, ‘புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்’ என்று அர்மாண்டோவை வர்ணிக்கிறார்கள். ‘ஃபார்முலா ஒன்’ கார் பந்தயத்தில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் லூயிஸ் ஹாமில்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்.