வலைப்பேச்சு



@AmalJos95950131 - ‘சாப்பிட்ட தட்டை அப்படியே sinkல வைத்துவிடு கண்ணா; aunty வந்து சுத்தம் செய்வார்கள்...’ என்று குழந்தைகளிடம் கூறும் பெற்றோரை சகாரா பாலைவனத்தில் 8 வழி சாலை போடும் வேலைக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சமூக நீதி இங்குதான் தொடங்குகிறது.

@Kozhiyaar - மனைவிக்கு புடவை எடுக்க தனியே போனா ரொம்ப எல்லாம் யோசிக்கிறது இல்லை! எதை எடுத்துட்டுப் போனாலும் ‘இதே கலர்ல இதே டிசைன்ல என்கிட்ட இரண்டு
புடவை இருக்கு’ன்னு சொல்லுவாங்க! அதனால் கண்ணை மூடி ஒண்ணைத் தொட்டு எடுத்துட்டு வந்திடுறது!

@amuduarattai - தவ வாழ்க்கை என்பது யாதெனில், ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தும், அதை நோண்டாமல், சும்மா இருப்பது.

@manipmp - ஃபேன்சி கடைக்கு வரும் போதெல்லாம் மனைவிக்குள் இருக்கும் சந்திரமுகி வெளிப்படுகிறார்...
#இந்தப் பாசி நல்லாயிருக்கா?#இந்த ஜிமிக்கி நல்லாயிருக்கா?

@pachaiperumal23 - டிரான்ஸிஸ்டர் ரேடியோவுக்கு நடந்த சண்டை முடிவடைந்து... ரிமோட்டுக்கு நடந்த சண்டை முடிவடைந்து... இப்போது அலைபேசிக்கு  குழந்தைகளிடையே நடக்கும் யுத்தம் பானிபட் போருக்கு நிகரானது.

@teakkadai1 - இந்த தர்மாஸ்பத்திரி, தர்ம தரிசனம்னு யாராச்சும் சொன்னா தலையில ஒரு கொட்டு கொட்டணும் போல இருக்கு. எல்லாம் மக்கள் வரிப்
பணத்தில் செயல்படுவதுதான். பொது மருத்துவமனை, பொது தரிசனம்னு இப்படி சொல்றத விட்டுட்டு...

@JamesStanly - ஜீ... வேஷ்டி சட்டை எல்லாம் புதுசா அயர்ன் பண்ணி வச்சிருக்கேன். நீங்க சொன்னிங்கனா பின்வாசல் வழியா நம்ம ஆபீஸ்க்கு வந்துடுவேன்...

@laksh_kgm - எத்தனையோ அழகுகளை அழித்து ஒழித்துவிட்டு அந்த அழகுகளின் புகைப்படங்களை, ஓவியங்களை, அழகு என்று ரசித்துக் கொண்டிருக்கிறோம்!

@Sabarish_twittz - கணக்கு பார்க்காமல் வாழ்றது சிங்கிள்ஸ் வாழ்க்கை...சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கணக்கு பார்க்குறது குடும்ப வாழ்க்கை...

@pachaiperumal23 - ‘ஏங்க நீங்க காய் வாங்கினாலோ, மற்ற பொருட்கள் வாங்கினாலோ நல்லதாகவும், விலை மலிவானதாகவும் வாங்குறீங்க... எப்படிங்க இப்படி?’ என்று மனைவி பாராட்டுகிறார் என்றால்... உங்களை கடைக்கு அனுப்பப் போகிறார் என்று அர்த்தம். அலர்ட்டா இருங்க.

@LAKSHMANAN_KL - சமஸ்கிருதம், அறிவையும், தேசிய ஒற்றுமையையும் வளர்க்க உதவுகிறது! - பிரதமர் நரேந்திர மோடி.
அப்புறம்... அதை எதுக்கு இந்தியில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க..?!

@shivaas_twitz - ‘உனக்கு இன்னைக்கு கிருஷ்ணர் வேஷம் போடப் போறேன்’னு அம்மா சொன்னாங்க... ‘23 வயசுல எனக்கு கிருஷ்ணர் வேஷமா’ன்னு கேட்டேன். ‘எத்தனை வயசானாலும் நீ எனக்கு குழந்தைதான்டா’ன்னு சொன்னாங்க... ஒரு நிமிஷம் கண் கலங்கிடுச்சு...

@ItsJokker - புருஷன் மேல உள்ள கோவம், அவங்க வீட்டாளுங்க மேல உள்ள கோவத்தை பூரா குழந்தைங்க கிட்ட காமிச்சு, திருப்தி அடையுற சைக்கோஸ் நிறைய இருக்கு. நிறைய குடும்பத்தில வெளில தெரியாம இப்டி இருக்காளுங்க. ஆனா, குழந்தைகள் மீதான வன்முறைக்குதான் இங்கே தீர்வோ, நீதியோ கிடைக்குறது இல்ல. பாவம்.

@thoatta - சொந்த சகோதரிக்கு பாலியல் தொல்லை தந்தியா?
இல்ல...
பக்கத்து வீட்டு கதவுல சூச்சூ?
இல்ல...
கட்சிக்காரன் மேல பெட்ரோல்
குண்டு?
இல்ல...

வீடியோ கால் சில்மிஷம்?
இல்ல...
குட்கா வித்தியா?
இல்ல...
கொலை, கொள்ளை?
இல்லங்க...
அப்புறம் எதுக்குடா எங்க கட்சில சேர மிஸ்டு கால் கொடுத்த?!

@Jaisajoints - That Interview..!
நம் நாட்டின் தேசிய மலர் எது..?
அதை சொன்னாதான் எனக்கு வேலை கிடைக்கும்னா... அப்படிப்பட்ட வேலையே எனக்கு வேண்டாம் சார்..!

@saravankavi - உனக்கு எப்பெல்லாம் வீடியோ, ஆடியோவால பிரச்னை வந்து சிக்கி சின்னாபின்னமாகற நெலைமை வருதோ, அப்ப இந்த பெட்டியைத் திறந்து பாரு. இதுக்குள்ள இருக்கற தேசபக்தி, நாடுதான் முதல் அப்படிங்கற டயலாக் உனக்கு கை கொடுக்கும்...


இந்த @sankariofficial டுவிட்டர் ஐடியில் #சங்கரிபாலா’ என்ற ஹேஷ்டாகில் எழுதுபவர் பெண்ணா அல்லது பெண் பெயரில் எழுதும் ஆணா..? யாருக்கும் தெரியவில்லை. ஆனால், ஆண்களைப் போற்றி இவர் பதியும் டுவிட்டுகள் ஒவ்வொன்றும் ஒரிஜினல் ஆண்களால் ரீஷேர் செய்யப்பட்டு வைரலாகின்றன!
அப்படி என்ன டுவிட்டுகிறார்..? சாம்பிளுக்கு சில...

@sankariofficial - ஆண்களை ஆண்களாக  இருக்க விடுங்கள்... மாற்ற முயல்வது அவர்கள் இயல்பை அழித்து ஒடுக்கிவிடும்...
@sankariofficial - தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் பேராவலினால் தங்கள் தேவைகளை மறந்தும் பல நேரங்களில் மறைத்தும் விடுகின்றனர் ஆண்கள்...
@sankariofficial - சில சிறப்பான சந்தர்ப்பங்களைத் தவிர பிற நேரங்களில் அடர் நிறச் சட்டைகளை அணிய ஆண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை...

@sankariofficial - ஓடி ஓடிப் பாடுபடுவது ஒரு சாண் வயிற்றுப்பசியைப் போக்கத்தான் என்ற பேருண்மையை உணர்ந்ததால், சாப்பாட்டை வீணாக்க ஆண்கள் எப்போதும் விரும்புவதில்லை...
@sankariofficial - பொது இடங்களில் தங்கள் குடும்ப விபரங்களையும் புகைப்படங்களையும் பகிர்வதில் பெண்களைவிடவும் ஆண்களுக்கு அதிக பயம் உண்டு...
@sankariofficial - மணமாகிச் சென்ற மகள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் காபி போடச் சொல்லிக் குடிப்பதில் அப்பாக்களுக்குப் பேரானந்தம்...

@sankariofficial - ‘மௌனம்’ ஆண்களுக்காகவே  எழுதப்பட்ட அகராதி...
@sankariofficial - ஆண்களின் கோபம் நெடுநாள்களுக்கு எல்லாம் நீடிப்பதில்லை, பெண்களைப் போல...
@sankariofficial - புகைப்படங்களில்  ஆண்கள் பற்கள் தெரிய  சிரிப்பதில்லை...

@sankariofficial - தங்கள் வீட்டு ஆண்கள்  நன்றாக இருக்க வேண்டும் என்று  வாசலில் அடிக்கடி தீபம் மட்டுமே  ஏற்றி வைக்கப்படுகிறது பெண்களால்...!
@sankariofficial - குழந்தை வளர்ப்பு ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்றாலும் ஆணை விடவும் பெண்ணே சிறப்பாக வளர்ப்பாள் என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. பல இடங்களில் ஆண் சிறந்த தாயாகவும் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.@sankariofficial - தங்கள் பிரச்னைகளையும் தீர்த்துக்கொண்டு தங்களை அண்டியுள்ளவர்களின் பிரச்னைகளையும் தீர்க்கவேண்டிய கட்டாயத்தில் ஆண்கள் வாழ்கிறார்கள்...

@mohanramko - மாடிப்படியெல்லாம் ஏறிப் போய் வடாம் காய வைக்க முடியாது... இப்ப ஒரு தெருவை குத்தகைக்கு எடுக்க முடியுமா? முடியாதா?

@drkvm - உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் போட்டி - கமல்ஹாசன்
# மீண்டும் பதற்றத்தில் நிர்வாகிகள்!

@kumarfaculty - ஒரு வீட்டிலிருந்து வரும் கருகும் வாசனை பக்கத்து வீட்டு அடுப்புகளை எல்லாம் சந்தேகப்பட வைத்து விடுகிறது...

@ratweetzz - பணம் இல்லைன்னா automatic ஆக inferiority complex வந்துடுது...

@Jino_Offl - வெளிநாட்டிலிருக்கும் தந்தை குழந்தைக்கு ‘செல்’ல முத்தம் கொடுக்கிறார்...

@GreeseDabba2 - ஏப்பா புரோக்கர், 3 பெட்ரூம் பிளாட்னு சொல்லி கூட்டிட்டு வந்தே, இங்க வந்து பார்த்தா ரெண்டு பெட்ரூம்தான் இருக்கு?
அட... பூஜை ரூமையும் சேர்த்து மூணு பெட்ரூமுன்னு சொன்னேங்க..!

@Giri47436512 - அண்ணா... ‘சங்கு’ல பால் ஊத்துனா, பொறந்திருப்போம்... அதே சங்க ஊதி ‘சொம்பு’ல ஊத்துனா, போயிருப்போம்...

@Viji Ram - வாட்ஸ் அப் ஃபார்வர்ட். நாலு லைன் படிச்சே பிபி எகிறுது. முழுசும் படிச்சா பொசுக்குனு எதாச்சும் ஆயிரும். தட் சேம்பிள் லைன்ஸ்...
பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்...

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசுச் சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே!
3. மூக்குத்தி - மூக்குதான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய வளைய வரவேண்டும் என்பதற்காக.
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் - எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

@DrSharmila15 - ஆறு மாசத்துல மொத்த மீடியாவையும் கண்ட்ரோல் பண்ணிடுவேன்னு சொன்னீங்களே... ஜஸ்டு ஒருத்தன்...
அவனை  கண்ட்ரோல் பண்ண முடியலையே!

@mosakkara - ஆறு லட்சம் கோடிக்கு வாங்க எவன்ட்ட காசு இருக்கு?
அதான் பேங்க்ல லோன் குடுப்பேன்ல...
அதை எப்படி அவன் கட்டுவான்?
அதான் தள்ளுபடி பண்ணிடுவேனே...

@Ram Vasanth - இது நீயும்
உங்க ஃபேமிலியும் 1998 மே 3ல
(திருமணத் தேதி) இருந்து பண்ண மிஸ்டேக்ஸ்...

#ஸ்கூட்டிய தெருவிலயே நிறுத்திட்டு, சாவியையும் அப்படியே அதுல வச்சிட்டு வந்துடறயே... என்று நான் இன்று விசனம் கொண்டபோது!

@Ramanujam Govindan - எத்தனை பசியோடு இருந்தாலும் இந்த ஃபோட்டோவைப் பார்த்ததும் முதலில் அந்தப் பெண் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் ஒரு ஆண்!

@macchu_offcl - ட்ரிப்புக்குன்னு ஒரு வாட்ஸப் க்ரூப் ஆரம்பிச்சு ஜரூரா ப்ளானிங் நடந்துட்டுருக்கும். 2 மணிநேரத்துல எல்லாம் கூடி வர்றா மாதிரி இருக்கும்போது உட்கட்சி பூசல்... அதுக்குள்ள 4 தனி க்ரூப்... 40 ஐடியான்னு போயி கடைசில ட்ரிப்புக்கு சங்கு...

@kumarfaculty - தடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்கிறபோதுதான் சண்டைகள் உக்கிரமடைகின்றன்...

@mekalapugazh - ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ என்று எல்லா மனைவியரும் எளிதில் கடந்து விடுகின்றனர்... கணவனின் மாற்ற முடியாத குணங்களை.

@balebalu - முன்பு: படிச்சு படிச்சு புத்தகம் கிழிஞ்சு போச்சு...
இப்போ: பார்த்துப் பார்த்து சார்ஜ் தீர்ந்து போச்சு...
#Onlineclasses

@pachaiperumal23 - இறைவா, கறிக்கடையில எலும்பு இல்லாம கறிவாங்கிட்டு வந்து என் வீட்டம்மாகிட்ட நாளைக்கு
காலையில் நல்லபேரு எடுக்கணும்பா...ப்ளீஸ் சேவ் மீ...

@erode_kathir - தமக்கு துளியும் தொடர்பே இல்லாத இருவரின் மகிழ்ச்சியைக் காணும்போது புன்னகை செய்கின்றவர்களின் மனம் நெகிழ்வானது, நம்பிக்கை மிகுதியானது!

@Gokul Prasad - ஞாயிற்றுக்கிழமையாச்சே என எட்டரை மணி வரை தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி, ‘சமந்தா டிவோர்ஸ் பண்ணிட்டாளாமே? அந்த பேப்பர்ல போட்டிருக்கான்...’ என்றார் அப்பா. நான் தூக்கக் கலக்கத்தில், ‘இன்னும் பண்ணல. இந்த வாரத்துக்குள்ள பண்ணப் போறதா பேச்சு...’ என்றேன்.
‘அப்ப அந்த நியூஸை நீ ஃபாலோ பண்ணிட்டு இருக்க? உருப்படியான வேலை எதுவும் பார்க்கல?’

‘தூங்கிட்டு இருந்தவனை எழுப்பித்தான் இதைக் கேட்கணுமாப்பா?’