பயோடேட்டா-Drugs!
 பெயர் : போதைப் பொருள்; பொதுவாக டிரக். வகைகள் : மதுபானம், புகையிலை, கஞ்சா, எல்எஸ்டி, ஹெராயின், கோகைன், ஸ்டெராய்ட்ஸ், ஜிஹெச்பி, அபின், கேட்டாமைன், அயஹவாஸ்கா, காட், எம்டிஎம்ஏ, மெஸ்கலைன், மெத்தம்பெட்டாமைன், பிசிபி, சல்வியா, ஓபியம், சிந்தடிக் கனாபினாய்ட்ஸ்... என உலகம் முழுவதும் பல வகைகளில் போதைப் பொருட்கள் கிடைக்கின்றன.
 வரலாறு : பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதன் போதைப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். மனிதன் தோன்றிய நாட்களில் மனதுக்கு அமைதி, மகிழ்ச்சி, தளர்வு மற்றும்பாதிப்பு : ஆண்டுதோறும் போதைப் பொருட்கள் பழக்கத்தினால் உண்டாகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி. உலகில் நடக்கும் தற்கொலைகளில் 50 சதவீதத்துக்குக் காரணமாக இருப்பது போதைப் பொருட்கள்தான்.
50 சதவீத வன்முறைக்கும் இதுவே காரணம். மட்டுமல்ல, 50 சதவீத விபத்துகள் போதைப் பொருள் பயனாளிகளால் நடக்கிறது. 80 சதவீத குடும்ப வன்முறைக்கு மூல காரணமாக இருக்கிறது மதுபானம். இதுபோக தொடர்ந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மூளை, கல்லீரல், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.
மயக்கம் தரும் சில தாவரங்களைக் கண்டறிந்து, அதை உண்டு வந்தான். அப்படி தாவரங்களைத் தேடி அலையும்போது சில தாவரங்கள் அவனுக்கு அதீதமான சக்தியையும், ஸ்டெமினாவையும், விநோதமான கற்பனைகளையும், அசாத்தியமான பார்வைகளையும், போதையையும் கொடுத்தன. இந்தத் தேடலில் அவன் கண்டுபிடித்ததுதான் கஞ்சா. கி.மு. 8000ம் வருடத்திலேயே கஞ்சாவைப் பயிரிட்டு, அதை மருத்துவத்துக்காகவும், போதைக்காகவும் பயன்படுத்தி வந்திருக்கிறான்.
மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியபோது அவன் பயிரிட்ட சில தாவரங்களில் கஞ்சாவும் ஒன்று. அந்த கஞ்சா இன்றும் முக்கியமான போதைப் பொருளாக நிலைத்து இருப்பது ஆச்சர்யம். கஞ்சா புழக்கத்தில் இருந்தபோதே புளித்த தேனிலிருந்து மது பானத்தைக் கண்டுபிடித்தான். கி.மு. 6000ம் வருடத்தில் ஒயின் மற்றும் பீர் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு.5000ல் சுமேரியர்கள் ஓபியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இன்றும் ஓபியம் பயன்பாட்டில் உள்ளது.
பண்டைய எகிப்தில் கி.மு.3500ம் வருடம் ஆல்கஹால் பரவலானது. கி.மு.3000லேயே சீனர்களின் முக்கிய போதைப் பொருளானது, கஞ்சா. கி.மு.2500ல் சுவிட்சர்லாந்துவாசிகள் போதைக்காக பாப்பி விதைகளைச் சாப்பிட்டனர். தவிர, கோகைனின் மூலப்பொருளான கோகோ இலைகளைச் சாப்பிடும் பழக்கம் கி.மு.2000லேயே ஆரம்பித்துவிட்டது. கி.மு.350ல் பாலஸ்தீனியர்களின் மத்தியில் ஒயின் அருந்தும் பழக்கம் உருவானது. கி.மு.300ல் கிரேக்கத்தில் பாப்பி ஜூஸை போதைக்காக மக்கள் குடித்தனர். இதே வருடங்களில் தென் அமெரிக்காவைச் சேர்ந்த பழங்குடியினர் மிமோடா பீன்ஸில் இருந்து மயக்க நிலையைத் தரும் கோகோபா என்ற போதைப் பொருளைத் தயாரித்தனர்.
பத்தாம் நூற்றாண்டிலிருந்து ஆசிய நாடுகளில் முக்கிய போதைப் பொருளாக விஸ்வரூபம் எடுத்தது ஓபியம். 1492ல் கொலம்பஸ் புகையிலையைக் கண்டுபிடித்தார். ஆனால், அதற்கு முன்பே அமெரிக்கப் பழங்குடிகளின் மத்தியில் புகையிலை அறிமுகமாகியிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அமெரிக்கர்கள் மதுவை விட மற்ற போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கோகைன், ஓபியம், கஞ்சா ஆகிய மூன்றும் அமெரிக்கர்களின் போதைப் பட்டியல்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன. அவர்கள் காப்பியையும் போதைப் பொருளாகவே கருதினர்.
19ம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் 5 லட்சம் அமெரிக்கர்கள் ஓபியத்துக்கு அடிமையாக இருந்தனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இருபதாம் நூற்றாண்டில் போதைப் பொருட்கள் புதிய பரிணாமத்தை அடைந்தன. அறிவியலின் வளர்ச்சியால் ஆய்வுக்கூடங்களை உண்டாக்கி புதுவிதமான போதைப் பொருட்களை உருவாக்க ஆரம்பித்தான்.
அரசாங்கங்கள் பல தடைகளை விதித்தாலும் போதைப் பொருளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இன்று உலகம் முழுவதும் பல்வேறு விதமான போதைப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டிவிட்டது. அவ்வப்போது போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகம்.
இந்தியா : பதினொன்றாம் நூற்றாண்டில் வணிகத்துக்காக இந்தியாவுக்கு வந்த அரேபியர்கள்தான் இங்கே ஓபியத்தை அறிமுகப்படுத்தினர். ஆரம்பத்தில் இது மருத்துவத்துக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், ஓபியத்தை நுகர்ந்தவர்கள் அதற்கு அடிமையாகிவிட்டனர். 1300ல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஓபியம் பயிரிடப்பட்டது. ஓபியத்தின் தேவை அதிகமாக, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 1720களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். இங்கிருக்கும் ஓபியத்தைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர்.
ஆம்; ஓபியத்தை அவர்கள் பயன்படுத்தியதோடு, சீனாவுக்கு ஏற்றுமதியும் செய்தனர். 1793ல் இந்திய அரசு ஓபியத்தை தடை செய்தது. ஆனால், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் ஓபியம் இருந்ததால் அதன் ஏற்றுமதிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத லாபத்தை அள்ளித்தந்ததால், ஆங்கிலேயர்கள் நிறைய இடங்களில் ஓபியத்தைப் பயிரிட்டனர்.
1799ல் சீனாவும் ஓபியம் பயன்பாட்டுக்கும், இறக்குமதிக்கும் தடை விதித்தது. அதனால் சட்டத்துக்குப் புறம்பான இறக்குமதியும், போதைப் பொருள் கடத்தலும் அரங்கேற ஆரம்பித்தது. ஓபியம் பயன்பாடு இந்தியாவிலும் அதிகரித்தது. இப்படியாக இந்தியாவுக்குள் நுழைந்த போதைப்பொருட்களின் ஆதிக்கம் இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது. ஆல்கஹால், ஓபியம், கஞ்சா, ஹெராயினை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
‘‘10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பல்வேறு விதமான போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். கடந்த 8 வருடங்களில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது...’’ என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. 70 சதவீத போதைப் பொருட்கள் சர்வதேச கடல் வழியாகவும், 20 சதவீதம் சாலை வழியாகவும், 10 சதவீதம் விமானத்தின் மூலமாகவும் கடத்தப்பட்டு, இந்தியாவில் விநியோகிக்கப்படுகின்றன. இந்தியாவில் கிடைக்காத போதைப்பொருட்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்: உலகளவில் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் போதைப் பொருள் வணிகத்தின் மதிப்பு சுமார் 52 லட்சம் கோடி ரூபாய்.
அதிகரிப்பு : 2010 முதல் 2019 வரையிலான வருடங்களில் மட்டும் போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
கஞ்சா : இன்று உலகம் முழுவதும் அதிகளவு பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக இருக்கிறது, கஞ்சா. சில நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அரசே அனுமதி கொடுத்ததும் அதன் பயன்பாடு அதிகரிப்புக்கு ஒரு காரணம். குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் கஞ்சாவின் பயன்பாடு 40 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், 15 - 20 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் அதிகமாக கஞ்சா போதைக்கு அடிமையாவதாகவும் சொல்கிறது ஓர் ஆய்வு. தமிழ்நாட்டில் கூட பள்ளி மாணவர்களின் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் கூட கஞ்சாவை மார்க்கெட்டிங் செய்யும் விதமான பல வீடியோக்கள் உலாவுகின்றன.
ஆல்கஹால் : கோவிட் லாக்டவுனில் உலகம் முழுவதும் மது விற்பனை 60.14 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
வரலாறு : பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதன் போதைப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். மனிதன் தோன்றிய நாட்களில் மனதுக்கு அமைதி, மகிழ்ச்சி, தளர்வு மற்றும் பாதிப்பு : ஆண்டுதோறும் போதைப் பொருட்கள் பழக்கத்தினால் உண்டாகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி.
உலகில் நடக்கும் தற்கொலைகளில் 50 சதவீதத்துக்குக் காரணமாக இருப்பது போதைப் பொருட்கள்தான். 50 சதவீத வன்முறைக்கும் இதுவே காரணம். மட்டுமல்ல, 50 சதவீத விபத்துகள் போதைப் பொருள் பயனாளிகளால் நடக்கிறது. 80 சதவீத குடும்ப வன்முறைக்கு மூல காரணமாக இருக்கிறது மதுபானம். இதுபோக தொடர்ந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மூளை, கல்லீரல், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.
த.சக்திவேல்
|