குறைந்தபட்ச சம்பளம் ரூ.63 லட்சம்!
சரியாக 18 வருடங்களுக்கு முன்பு வாஷிங்டன் நகரில் லூகாஸ் மற்றும் டான் பிரைஸால் ஆரம்பிக்கப்பட்ட நிதிச் சேவை நிறுவனம், ‘கிராவிட்டி பேமண்ட்ஸ்’. இன்று கிரெடிட் கார்டு புராசஸிங் செய்வதில் வாஷிங்டனிலேயே பெரிய நிறுவனம் இதுதான். தவிர, அமெரிக்காவில் உள்ள கிரெடிட் கார்டு புராசஸிங் நிறுவனங்களில் 70வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் இப்போது மிகக்குறைந்த வருட வருமானமே 80 ஆயிரம் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 63 லட்ச ரூபாய்.
 இவ்வளவு சம்பளத்தைக் கொடுக்க மூல காரணமாகத் திகழ்கிறார் இதன் தலைமைச் செயல் அதிகாரியான டான் பிரைஸ். 2015ம் வருடம் நிறுவனத்தின் குறைந்த சம்பள அளவை 70 ஆயிரம் டாலர்களாக உயர்த்தினார் டான். மற்ற நிறுவனங்கள் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாததால் டான் மீது விமர்சனங்களை வைத்தன. ஆனால், டான் சம்பள அளவை வருடம்தோறும் உயர்த்திக்கொண்டே இருந்தார்.
இதற்காக தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறார். ‘‘மற்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக்கொடுக்க வேண்டும். ஊழியர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும்...’’ என்று சமீபத்தில் டான் பதிவிட்டிருக்கும் டுவிட் செம வைரலாகி வருகிறது.
த.சக்திவேல்
|