கே.ஜி.எஃப் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்!
இணையத்தில் இப்பொழுது எது வைரல்..? அதே! கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி போட்டோ ஷூட்தான்!கீர்த்தி சுரேஷ் நடித்த சமீபத்திய படங்கள் எதுவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால் இதுவரை பொத்திப் பொத்தி வைத்திருந்த அழகை, போட்டோ ஷூட் நடத்தி அப்படங்களை இணையத்தில் கசிய விட்டார்.இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது! யெஸ். அவர் நினைத்தபடியே இணையத்தில் ஹாட் டாபிக் ஆனார் கீர்த்தி சுரேஷ்.

இப்போது அந்த கவர்ச்சிகரமான முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. வெற்றிடமாக இருந்த கால்ஷீட் டைரி, நிரம்பத் தொடங்கியுள்ளதாம். அதில் ஹைலைட், மிகப்பெரிய வாய்ப்புதான்.
ஆம். ‘கே.ஜி.எஃப் - 2’ படத்தைத் தயாரித்த ‘ஹொம்பலி’ நிறுவனம் தனது அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷை கமிட் செய்ய திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தை ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கோங்குரா இயக்க வாய்ப்புகள் அதிகமிருக்கிறதாம். ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கு முன்பாக இப்படத்தை முடித்துவிடவும் சுதாவை தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.
காம்ஸ் பாப்பா
|