இடையழகி இலியானா கர்ப்பம்!
நாளொரு க்ளாமர் ரீல்சும் பொழுதொரு ‘இடை’ போட்டோவுமாக இளசுகளைச் சுண்டி இழுத்த நடிகை இலியானா, இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறார். அதுவும் மணமாகாமல்!
குழந்தைக்கு அப்பா யார் என்றோ, தனக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதையோ அவர் சொல்லவே இல்லை!  உடனே ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்கள், ஒரு நபரை கொத்தாகப் பிடித்து இவர்தான் என்கிறார்கள்!அவர், காத்ரீனா கைஃப்பின் உடன்பிறப்பு! செபாஸ்டின் லாரெண்ட் மைக்கேல் என்பது பெயர். இவர் லண்டனில் வசிக்கும் மாடல். இவருக்கும் இலியானாவுக்கும் இடையேதான் பத்திக்கிச்சு என லவ் ரிப்போர்ட்டை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்ஸ் ஷேர் செய்து வருகிறார்கள்.
காம்ஸ் பாபா
|