IMDB சொல்லும் 10!



திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும் பிரபல இணையதளமான ஐஎம்டிபி, இந்த கோடைக்காலத்தில் இந்தியர்கள் அதிக எதிர்பார்புடன் பார்க்க காத்திருக்கும் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படங்கள் என்றாலும், இந்தப்பட்டியலில் 4 படங்கள் தென்னிந்தியப் படங்கள் என்பதுதான் ஹைலைட்!
‘பாகுபலி’ பட புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’, பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸின் ‘சத்ரபதி’, தேஜா சஜ்ஜாவின் ‘ஹனுமன்’, நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ என 4 தெலுங்குப்படங்கள் இதில் முறையே 3வது, 5வது, 9வது மற்றும் 10வது இடங்களைப் பெற்றிருக்கின்றன.

இந்தப் பட்டியலில் நம்மூர் அட்லீ, ஷாரூக்கானை வைத்து இயக்கும் ‘ஜவான்’ முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கு அடுத்து ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படமும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இந்தப் படங்கள் தவிர ‘கடார் 2’, ‘மைதான்’, ‘யோதா’ மற்றும் ‘ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கஹானி’ ஆகியப் படங்கள் இடம்பிடித்திருக்கின்றன.

காம்ஸ் பாப்பா