ஒரு பாட்டுக்கு இம்புட்டா?!



திருமணமாகி தாயானால் என்ன..? சோஷியல் மீடியாவில் கவர்ச்சிப் படங்களையும், நீச்சல் உடையில் இருக்கும் வீடியோக்களையும் போட்டுக்கொண்டே இருந்தால்போதும்... தொடர்ந்து லைம் லைட்டிலும் இருக்கலாம்; சினிமாவிலும் தாக்குப்பிடிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் ஸ்ரேயா.தான் நடிக்கும் படங்களுக்கான ப்ரமோஷன்களிலும் தவறாமல் கலந்து கொள்பவர் அங்கேயும் கவர்ச்சி தரிசனத்தைக் கொடுப்பதால், அந்த விழா சம்பந்தப்பட்ட வீடியோக்களும் வைரல் ஆகிவிடுகின்றன.

நிச்சயம் ஹீரோயினாக நடிக்க அழைக்கமாட்டார்கள் என்பதை தெளிவாகவே புரிந்து கொண்டிருப்பவர், வருகிற வாய்ப்புகளை மறுக்காமல் ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் கவர்ச்சி ஆட்டம் ஆடவும் ரெடியாக இருக்கிறார். ஆனால், ‘கெட்ட’ ஆட்டத்துக்கு அவர் கேட்கும் சம்பளம்தான் மிரள வைப்பதாக திரையுலகினர் அலறுகிறார்கள்.
ஒரு பாடல்... ஐந்து நாள் கால்ஷீட்... ரூ.75 லட்சம் சம்பளம் என்கிறாராம்.

காம்ஸ் பாப்பா