துப்புரவு ராஜாவாக மாறிய பிசினஸ் மேன்!



ஒரே நாளில் கோரக்பூர் எங்கும் பிரபலமாகிவிட்டார் மகேஷ்  சுக்லா. அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா? உத்தரப்பிரதேசத்தில் உள்ள முக்கிய நகரம், கோரக்பூர். அங்கே உள்ள கோரக்நாத் பகுதியைச் சேர்ந்த பிசினஸ் மேன்தான் மகேஷ் சுக்லா. கம்ப்யூட்டர் மற்றும் கேமரா கடையை நடத்தி வருகிறார். இதுபோக தினமும் காலை 4 மணி முதல் 8 மணி வரை சுற்றியுள்ள பகுதிகளைத் துப்புரவு செய்கிறார்.

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் எனத் தேர்ந்தெடுத்து இந்த சமூக சேவையைச் செய்து வருகிறார். கடந்த 2008ம் வருடத்திலிருந்து இந்தப் பணியை அவர் செய்து வந்திருக்கிறார். ஆனால், தன்னைப்பற்றி அவர் எங்கேயும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சமீபத்தில் அவர் யார் என்ற விவரங்கள் தெரியவர, கோரக்பூரே மகேஷ் சுக்லாவை ‘துப்புரவு ராஜா’ என்று கொண்டாடுகிறது. இப்போது அவருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களும் துப்புரவுப்பணியில் இறங்கியுள்ளதுதான் இதில் ஹைலைட்.

த.சக்திவேல்