மாடர்ன் ஹேண்ட்பேக்
த.சக்திவேல்இன்ஸ்டாகிராம் பிரபலம் மற்றும் இந்தி தொலைக்காட்சித் தொடர் நடிகை என பன்முகம் கொண்ட ஆளுமை, ஸ்வேதா மஹதிக். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளி வருபவர் இவர். சமீபத்தில் கிரியேட்டிவான ஒரு வீடியோவை வெளியிட்டு 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை அள்ளி, வைரலாகிவிட்டார். ஒரு ஹேண்ட் பேக்கை ஸ்வேதாவே டிசைன் செய்யும் வீடியோ அது. அதாவது காலியான ஒரு அரிசிப்பையை எடுத்துக்கொள்கிறார் ஸ்வேதா.
 அதை ஹேண்ட் பேக் வடிவமைப்பதற்கு உரிய அளவுகளில் வெட்டுகிறார். அரிசிப்பையில் எப்படி ஹேண்ட் பேக் என்று யோசிப்பதற்குள் அதை அழகான ஹேண்ட் பேக்காக தைத்து அசத்துகிறார். அரிசிப்பையில் தயாரிக்கப்பட்ட ஹேண்ட்பேக்கா என்று ஆச்சர்யப் படும்படி காட்சி தருகிறது அந்த ஹேண்ட்பேக். இறுதியில் அந்த ஹேண்ட்பேக்குடன் அவர் கொடுக்கும் போஸ்தான் இதில் ஹைலைட். ஸ்வேதாவின் கிரியேட்டிவ் ஹேண்ட்பேக்கை பல பாலிவுட் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.உண்மையிலுமே இதுதான் ‘மாடர்ன் ஹேண்ட்பேக்’ என்று பார்வையாளர்களின் பின்னூட்டங்களும் குவிகின்றன.
த.சக்திவேல்
|