பாதி படுக்கை வாடகைக்கு!
‘‘கனடாவில் வாழ்ந்து வரும் மோனிக் ஜெர்மியா என்ற பெண், தனது படுக்கையில் பாதியை வாடகைக்குவிட்டு மாதந்தோறும் 40 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார்’’ என்பதுதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் நியூஸ். அதாவது, குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இரவில் மோனிக்கின் அருகிலேயே உறங்கிக்கொள்ளலாம். அவரை அரவணைத்துக் கொள்ள மட்டுமே அனுமதி. அதுவும் மோனிக்கிற்குப் பிடித்தால் மட்டுமே.
 கொரோனோ காலத்திலிருந்து பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார் மோனிக். சரியான வேலையும் இல்லை. காதலும் முறிந்துவிட்டது. வாடகை கூட கொடுக்க முடியாத சூழல். இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகே, பொருளாதாரத் தேவைக்காக படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த பிசினஸை முன்னெடுத்திருக்கிறார் மோனிக்.
ஆன்லைன் மூலமாக அவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். நகரங்களில் தனியாக வாழும் ஆண்கள்தான் மோனிக்கின் வாடிக்கையாளர்கள்.‘‘இந்தத் தொழில் பாதுகாப்பற்றது...’’, ‘‘நவீன பாலியல் தொழில்...’’ என்று பலரும் மோனிக்கை விமர்சித்து வருகின்றனர். ஆனால், இன்னொரு பக்கம் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.
சுகர் பாய்
|