BRAIN STORAGE
உலகின் மிகப் பெரிய பாலைவனம் எது எனக் கேட்டால் உடனே சஹாரா என்று சொல்லிவிடாதீர்கள். அண்டார்டிகா கண்டம்தான். பாலைவனம் எனும் பகுப்பாடு வருடாந்திர மழைப் பொழிவின் அளவைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நிலப்பகுதியில் வருடத்திற்கு 25 செமீக்கு குறைவான மழைப்பொழிவு இருந்தால் அது பாலைவனம். அந்த வகையில் சஹாரா மூன்றாம் பெரிய பாலைவனம். அதேநேரம் வெப்பமான நிலப்பரப்பு கொண்ட பாலைவனங்களுள் அதற்கு முதல் இடமுண்டு. கோபம் வந்தால் மாடுகளும் ஆடுகளும் நற நறவென பற்களைக் கடிக்க முடியாது. அவற்றிற்கு, மேல் முன் வரிசைப் பற்கள் கிடையாது; மேல் புறத்தில் கடைவாய்ப் பற்கள் மட்டுமே உண்டு.
சமணத்தின் ஒரு பிரிவாகவே ஆசிவகம் கருதப்படுகிறது. நமது நாட்டில் தோன்றி, மக்களிடம் நெருங்கி வளர்ந்த சமணமும் பௌத்தமும் பிற்காலத்தில் இங்கே ஏன் தழைக்கவில்லை என்பது சார்பற்ற, ஆழமான, கால ரீதியிலான ஆராய்ச்சிக்குரியது.
சினிமா ஒன் லைனர்: ஒரு கொலை. தெளிவான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளி கைது. கோர்ட்டில் விடுதலை. எப்படி?
கைரேகை ஒத்துப்போகவில்லை. கொலை செய்தது அவனுடைய ட்வின். இரட்டை குழந்தைகளின் கை ரேகைகள் வித்தியாசமானவை என்பது அறிவியல் உண்மை.
ராஜேஷ் சுப்ரமணியன்
|