ஷாப்பிங் வருவியா மாட்டியா?
ரவி... ம்ம்... அப்ப நீ எங்கூட தீபாவளி ஷாப்பிங் வரமாட்ட..? மாட்டேன்... ஏன்..? அது ரொம்ப போர்... அவ்ளோதான..? ஆமா...
 அப்ப சரி. வீட்ட பத்திரமா பாத்துக்க. நான் மட்டும் போய்ட்டு வர்றேன்... வீடெல்லாம் பத்ரமாத்தான் இருக்கும்... நீ பத்திரமா போய்ட்டு வா...
சரி... மதிய சாப்பாட்டுக்கு குக்கர்ல ஒரு டம்ளர் ரைஸ் மூணு டம்ளர் தண்ணி ஊத்தி மூணு விசில்ல எறக்கி வச்சிடு... தெரியும்... அப்புறம் ஊத்திக்க ஃபிரிஜ்ல நேத்து வச்ச சாம்பார், ரெண்டு நாளைக்கு முன்ன வச்ச காரக் குழம்பு இருக்கு. எது வேணுமோ அத எடுத்து சூடு பண்ணி ஊத்திக்க... அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்... அப்புறம் கிச்சன்ல முந்திரி திராட்சை டப்பாவ தேடாத. நேத்தே எடுத்து ஒளிச்சி வச்சிட்டேன். கிராதகி...
என்ன வாய் ஏதோ முணுமுணுக்குது..? ஒண்ணுமில்ல... அப்புறம் கிச்சன்ல இருக்கிற நெய்ய சின்னப் புள்ள மாதிரி எடுத்து திங்காத... ஏன்.. அதையும் ஒளிச்சி வைக்க வேண்டியதுதானே? வைக்கலாம்தான்... ரொம்பவும் இன்சல்ட் பண்ண வேணாம்னுதான்...
தெரியுதுல்ல? கெளம்பு... இரு... சாப்ட்டு சும்மா ஒக்காராம அழுக்குத் துணிகள வாஷ் போட்டு ஓடி முடிச்சவுடனே எடுத்து காய வச்சிடு... சரி... வாஷுக்கு... ஒரு மூடி லிக்குட் ஊத்துனா போதும்.... சரி... கம்போர்ட் ரெண்டாவது வாஷ் முடிஞ்சவுடனே ஊத்து... சரி... தூங்கிடாத... சர்ரீரீஈஈ...
மதியம் சாப்பிட்டவுடனே, சாப்ட்ட பிளேட், பாத்திரம், கிண்ணம் எல்லாத்தையும் வெளக்கி நீட்டா தொடச்சி வச்சிடு... உஸ்ஸ்... சரிம்மா... அப்புறம் அக்கம்பக்கத்து பொண்ணுங்ககிட்ட வழிஞ்சி உனக்குன்னு இருக்கிற நல்ல பேர கெடுத்துக்காத... போதும்மா. கெளம்பு...
அப்புறம் சும்மா ஒக்காராம தையல் மெஷினை தொடச்சி வை... முடிஞ்சா ஆயில் போட்டு வை... ஜானஜு... என்ன..? ஒண்ணு சொல்லவா..? சொல்லுங்க... நானும் உன் கூட ஷாப்பிங் வர்றேன்... அது..!
பொம்மையா முருகன்
|