Brain Storage!



Anti poetry, Vertical poetry, Eco Poetry, Haiku poetry, Deep image poetry, post-modern poetry - இவை மட்டுமல்லாமல், இவற்றைப் போன்ற  பல வகை கவிதைகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது நமது Sangam Poetry. Try it once.‘நிலவே என்னிடம் நெருங்காதே...’ என்று பாடியதை நிலவு சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டுவிட்டது. நிலவு, பூமியை விட்டு வருடத்திற்கு 3.8  செமீ அளவிற்கு விலகி விலகிச் சென்றுகொண்டிருக்கிறது. 

‘உனக்கு நாக்கு நீளம்’ என்று தைரியமாக பச்சோந்தியிடம் சொல்லலாம். பச்சோந்தியின் உடல் நீளத்தை விட சுமார் இரண்டு மடங்கு நீளமானது அதன் நாக்கு. நாக்கைக் கொண்டே இமைக்கும் நேரத்தில் தனது இரையை வாயினுள் உள் இழுத்துக்கொள்கிறது.எக்ஸ்ட்ரா: மனித உடலிலேயே அதிகப்பட்ச வலு கொண்ட தசை நமது நாக்குதான்!

யூதர்கள் பரவலாகப் பேசும் ஹீப்ரு மொழி, உலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று. பைபிளின் ‘பழைய ஏற்பாடு’ நூலின் பெரும் பகுதி ஹீப்ரு மொழியில்தான் எழுதப்பட்டது. ‘புதிய ஏற்பாடு’ நூலின் பெரும் பகுதி ஒரு வகையான கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. யூதர்களின் புனித நூலின் பெயர் ‘டோரா’. ‘ஒரே கடவுள்’ கொள்கை கொண்ட அவர்களின் மதத்தின் பெயர் ‘யூதம்’.

ராஜேஷ் சுப்ரமணியன்