SKY ஸ்டேடியம்
சவுதி அரேபியாவில் அந்தரத்தில் மிதப்பதைப் போன்ற ஒரு விளையாட்டு மைதானம் வரப்போகிறது. இங்கே கால்பந்து போட்டிகள் மட்டுமல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. ‘நியோம் கம்பெனி’க்குச் சொந்தமான இந்த மைதானம், நிலத்திலிருந்து 350 மீட்டர் உயரத்தில் அமையப் போகிறது. இவ்வளவு உயரத்தில் அமையப்போகும் முதல் விளையாட்டு மைதானம் இதுவாகத்தான் இருக்கும். மட்டுமல்ல, இந்த மைதானத்தில் 46,010 பேர் அமர்ந்து விளையாட்டுப் போட்டிகளையும், பல்வேறு நிகழ்வுகளையும் ரசிக்க முடியும்.
பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த மைதானத்தின் கட்டுமானம், 2027ம் வருடம் ஆரம்பிக்கிறது. 2032ம் வருடம் மைதானத்தை திறப்பதற்கு முடிவு செய்திருக்கின்றனர். மைதானத்தின் மேற்பரப்பில் ஹைபிரிட் புற்களை வளர்க்கவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
வருகிற 2034ம் வருடத்துக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் சவுதி அரேபியாவில் நடக்கவிருக்கின்றன. அப்போது முக்கியமான போட்டிகள் இந்த மைதானத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.
சில்லென்ற கோவையன்
|