Brain Storage
63 நாயன்மார்களில் மூவர் பெண்கள். காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் மற்றும் இசைஞானியார்.
 Birthday Paradox: ஓர் அறையில் 23 பேர் இருக்கிறார்கள் எனக் கொள்வோம். அவர்களில், இருவருக்கு ஒரே பிறந்த நாள் (தேதி மற்றும் மாதம், உதாரணத்திற்கு 31 March) இருக்க ஐம்பது சதவிகித வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் ஒரு வண்டி வைத்திருக்கிறீர்கள். காலப்போக்கில் அதன் எல்லாப் பாகங்களையும் புதிதாக மாற்றி விட்டீர்கள். இப்போது உங்களிடம் இருப்பது அதே பழைய வண்டிதானா? குழப்பமா இருக்கா ? (இணையத்தில் தேடுங்கள்: The Ship of Theseus).
மெக்சிகோ நாட்டில் உள்ள Tequila எனும் பகுதியில் பயிரிடப்படும் Blue Agave எனும் செடிகளில் இருந்துதான் Tequila பானம் தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் வோட்கா போல, Tequila மெக்சிகோ நாட்டின் signature drink.
திமிங்கலத்தின் பற்கள் அளவிற்கு பலம் கொண்டது நமது பற்கள். உடலின் மற்ற பாகங்களைப் போல, அடிபட்டால் சுயமாக காயம் ஆற்றிக்கொள்ள பற்களால் இயலாது.
‘இந்த வாக்கியம் பொய்’. அது உண்மை என்றால், அந்த வாக்கியம் தவறு. அது தவறு என்றால், அந்த வாக்கியம் உண்மை. என்ன, தலை சுற்றுகிறதா? இதுபோன்ற paradoxes நிறைய உண்டு இந்த உலகில். அறிவியலிலும் மெய்யியலிலும் கூட.
நீங்கள் space walk செய்ய முடியும் என்றால், சுமார் ஒன்பது வருடங்களில் நடந்தே சென்று நிலவை அடைந்து, அங்கே moon walk செய்யலாம்.
ராஜேஷ் சுப்ரமணியன்
|